Actor Bala Donates Free Ambulance : இலவச ஆம்புலன்ஸ் வழங்கிய பிரபல நகைச்சுவை நடிகர்...

Actor Bala Donates Free Ambulance :

Actor Bala Donates Free Ambulance : ஈரோடு மாவட்டம் கடம்பூர் அடுத்த குன்றி உள்ளிட்ட 18 மலை கிராம மக்களின் மருத்துவ பணிக்காக ஆம்புலன்ஸ் வாகனத்தை நகைச்சுவை நடிகர் பாலா வழங்கினார். இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் துவங்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் கடம்பூர் அடுத்த குன்றி உள்ளிட்ட 18 மலை கிராமங்களில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசித்துவரும் மக்கள் மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்காக கடம்பூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், சத்தியமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கும் வந்து செல்கின்றனர். குறிப்பாக பாம்புக்கடி போன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் மரணம் ஏற்படுகிறது.

இதன் காரணமாக குன்றி உள்ளிட்ட 18 மலை கிராம மக்களுக்கு மருத்துவ அவசர உதவி காலத்தில் பயன்படும் வகையில் 5 லட்சம் ரூபாய் மதிப்பில் இலவச ஆம்புலன்ஸ் (Actor Bala Donates Free Ambulance) வழங்க திட்டமிடப்பட்டது. இதையடுத்து நகைச்சுவை நடிகர் பாலாவின் சொந்த நிதியில் ஆம்புலன்ஸ் வாங்கப்பட்டது. அதன் திறப்பு விழா ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. உணர்வுகள் அறக்கட்டளை நிறுவன தலைவர் மக்கள் ராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் பாலா கலந்து கொண்டு பேசினார்.

தொடர்ந்து இலவச ஆம்புலன்ஸ் சேவையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பாலா, ஆம்புலன்ஸ் சேவையின்றி தவிக்கும் கிராம மக்களுக்கு புதிய ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், இதுபோன்ற மக்களுக்கு தன்னால் முடிந்த வரை தொடர்ந்து சேவை செய்வேன் எனவும் தெரிவித்தார்.

பிரபல பாலா விஜய் டிவி மூலம் தொடர்ந்து பல உதவிகளை செய்து வருவதை நாம் அறிவோம். மேலும் சமீபத்தில் பிரபல நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் பாலாவிடம் குறிப்பிட்ட தொகையை கொடுத்து அதை தனது சமூக சேவைக்கு பயன்படுத்துமாறு கூறியது குறிப்பிடத்தக்கது. தற்போது தொலைக்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கேற்று வருவதாகவும், முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க தனது அழைப்பிற்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் கூறினார். மேலும், நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் நாகரத்தினம், மாநகராட்சி கமிஷனர் ஜானகி ரவீந்திரன், ஈரோடு சுகாதாரத்துறை இணை இயக்குனர் அம்பிகா சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Latest Slideshows

Leave a Reply