Afghanistan vs Sri Lanka : ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை மோதல்

ஆசிய கோப்பை கிரிக்கெட் - Afghanistan vs Sri Lanka :

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் இலங்கை-ஆப்கானிஸ்தான் (Afghanistan vs Sri Lanka) அணிகள் மோதுகின்றன. குரூப் பி பிரிவில் வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளில் எந்த இரண்டு அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

வங்கதேச அணி விளையாடிய இரண்டு போட்டிகளில் 1 வெற்றி, 1 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்றுள்ளது. ஒரு வெற்றியின் மூலம் இலங்கை அணி 2 புள்ளிகளைப் பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி தோல்வியை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றாலும் ரன் ரேட் அடிப்படையில் பின்தங்கியிருப்பதால் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறுவது கடினம் என்று கூறப்படுகிறது.

Afghanistan vs Sri Lanka : ஆப்கானிஸ்தான் அணியின் நிகர ரன் ரேட் – 1.780. இதன் காரணமாக இலங்கைக்கு எதிராக அபார வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். உதாரணமாக, இலங்கை 300 ரன்கள் எடுத்தால், ஆப்கானிஸ்தான் அந்த இலக்கை 31 ஓவர்களில் எட்ட வேண்டும். அதேபோல் ஆப்கானிஸ்தான் 300 ரன்கள் எடுத்தாலும் இலங்கைக்கு எதிராக 127 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற வேண்டும். தற்போது இலங்கை அணி நல்ல பார்மில் இருப்பதால் இது நடக்க வாய்ப்பில்லை.

எனவே, இந்தப் போட்டியில் இலங்கை அணி போராடி தோற்றாலும், சுப்பர் 4 சுற்றுக்கு எளிதாக முன்னேறும். ஆப்கானிஸ்தான் கடந்த காலங்களில் சில வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், சமீப காலமாக மோசமான நிலையில் உள்ளது. குறிப்பாக வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானின் முக்கிய சுழற்பந்து வீச்சாளர்களான முஜீப் உர் ரஹ்மான் மற்றும் ரஷித் கான் ஆகியோர் ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்து ஏமாற்றம் அளித்தனர். எனவே ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறுவது கடினம் என்று கூறப்படுகிறது.

முதல் லீக் ஆட்டம் :

ஆசிய கோப்பையின் 4வது லீக் ஆட்டத்தில் வங்கதேசம்-ஆப்கானிஸ்தான் (Afghanistan vs Sri Lanka) அணிகள் விளையாடின. இலங்கைக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் தோல்வியடைந்ததால் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்துடன் இந்தப் போட்டியில் களமிறங்கியது. பின்னர் பேட் செய்த வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் குவித்தது. மெஹ்தி ஹசன் மிராஸ் மற்றும் ஷான்டோ இருவரும் சதம் அடித்தனர். இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு 335 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது.

அதிரடி ஆட்டக்காரர் குர்பாஸ் 1 ரன்னில் ஆட்டமிழக்க, ஆப்கானிஸ்தான் அணி தாக்குப்பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து ரஹ்மத் ஷா, ஜத்ரன் இருவரும் 2வது விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்தனர். இதில் ரஹ்மத் ஷா 33 ரன்கள் எடுக்க, பின்னர் வந்த கேப்டன் ஷாஹிதி பவுண்டரி அடித்தார். சிறப்பாக விளையாடிய ஜத்ரன் 51 பந்தில் அரைசதம் அடித்து, பின்னர் அதிரடியாக ஆடினார். ஆனால் ஹசன் மஹ்மூத் 75 ரன்களில் ஆட்டம் இழக்க, மறுபுறம் சிறப்பாக அரை சதம் விளாசிய கேப்டன் ஷாஹிடியும் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 193 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்த கட்டத்தில் ஆப்கானிஸ்தான் சறுக்க ஆரம்பித்தது, மீண்டும் ஆட்டத்திற்கு திரும்ப முடியவில்லை. ஆடுகளத்தை உணர்ந்த வங்கதேச பந்துவீச்சாளர்கள் பவுன்சர்களை சரியாக பயன்படுத்தி ரன்களை தடுத்தனர். இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட முயன்று ஒருவர் பின் ஒருவராக விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

ரஷித் கான் 15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். இறுதியாக ஆப்கானிஸ்தான் அணி 44.3 ஓவரில் 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பங்களாதேஷ் தரப்பில் தஸ்கின் அகமது 4 விக்கெட்டுகளையும், சொரிபுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம் வங்கதேச அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Latest Slideshows

Leave a Reply