Aishwarya Shankar Reception : அக்கா திருமணத்தில் அட்லீ உடன் ஆட்டம் போட்ட அதிதி ஷங்கர்
இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா சங்கரின் திருமணம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இரவு நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் (Aishwarya Shankar Reception) பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், இயக்குனர் அட்லீ உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில், தளபதி விஜய்யின் கில்லி பாடலுக்கு அட்லீ மற்றும் ரன்வீர் சிங் அதிதி ஷங்கருடன் இணைந்து நடனமாடியது தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Aishwarya Shankar Reception :
பல வருடங்களாக தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனராக வலம் வரும் ஷங்கர், இந்த ஆண்டு ஜூன் மாதம் கமல்ஹாசனை வைத்து இயக்கிய இந்தியன் 2 படத்தை வெளியிட காத்திருக்கிறார். விரைவில் படத்தின் டீசர், ட்ரெய்லர், இசை வெளியீடு என பல அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றன. ஈஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி, அர்ஜித் என மூன்று குழந்தைகள் உள்ளனர். இதில் ஐஸ்வர்யா சங்கர் கிரிக்கெட் வீரர் ரோஹித்தை 2021ல் திருமணம் செய்தார். ஆனால் அந்த திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் ஐஸ்வர்யா சங்கர் உடனடியாக ரோஹித்தை விவாகரத்து செய்தார்.
இதைத்தொடர்ந்து சங்கர் தனது மகளுக்கு தருண் கார்த்திகேயனை திருமணம் செய்து வைக்கிறார். பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல திரையுலக பிரபலங்கள் ஷங்கரின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். ஷங்கரின் அடுத்த படத்தில் ரன்வீர் சிங் நடிக்கவிருப்பதால் இந்த திருமண விழாவில் பங்கேற்றுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஷங்கரின் இயக்கத்தில் சிவாஜி, எந்திரன் மற்றும் 2.0 ஆகிய படங்களில் பங்கேற்று ஹாட்ரிக் சாதனை படைத்தார். திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அந்நியன், ஐ படங்களில் நடித்துள்ள சீயான் விக்ரமும், வேள்பாரி படத்தில் நடிக்க காத்திருக்கும் சூர்யாவும் கலந்து கொண்டுள்ளனர்.
அட்லீ உடன் அதிதி ஷங்கர் ஆட்டம் :
இயக்குனர் அட்லீ தனது குருநாதர் ஷங்கரின் மகள் திருமணத்தில் பங்கேற்றார். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் (Aishwarya Shankar Reception) அதிதி சங்கருடன் இணைந்து “அப்படி போடு” பாடலுக்கு நடனமாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், அட்லீ, அதிதி ஷங்கருடன் இணைந்து கில்லி பாடலின் ஸ்டெப்களுக்கு நடனமாடியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த பாடல் மட்டுமின்றி, மாஸ்டர் படத்தில் வரும் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு மணமக்களுடன் ரன்வீர் சிங், அட்லீ, அதிதி சங்கர் ஆகியோர் நடனமாடும் வீடியோ காட்சிகளும் வைரலாகி வருகிறது. தளபதி விஜய் கோட் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால் இந்த திருமண விழாவில் பங்கேற்கவில்லை. விஜய் வரலனாலும் விஜய்யின் பாடல் களைகட்டியது. திருமண விழாவில் விஜய்க்கு பதிலாக அவரது மனைவி சங்கீதா விஜய் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியதாகவும் கூறப்படுகிறது.
Latest Slideshows
-
Carrom World Cup 2025 : கேரம் உலகக் கோப்பை.. 3 தங்கம் வென்ற சென்னை காசிமேடு கீர்த்தனா.!
-
IndiGo Flight Cancellations : இண்டிகோ முடக்கம் தாக்கம் - ‘கல்லா’ கட்டிய மற்ற விமான நிறுவனங்கள்..!
-
Virat Kohli Latest Record : இந்தியா Vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டி- சோதனையிலும் விராட் செய்த மிகப்பெரிய சாதனை
-
Redmi 15C 5G Smartphone Price : பட்ஜெட் விலையில் ரெட்மி 15C ஸ்மார்ட்போன் அறிமுகம் : சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
-
The Architect's Dream Book Review : எழுத்தாளர் நிகில் குமாரின் முதல் நாவல் "தி ஆர்கிடெக்ட்ஸ் ட்ரீம்"
-
Real Estate Market Growth : ரியல் எஸ்டேட் சந்தை 4 ஆண்டுகளில் ரூ.10.8 லட்சம் கோடியாக வளரும்
-
Tere Ishk Mein Movie Review : அழுத்தமான காதல் கதையாக ஈர்க்கிறதா?
-
Nothing Phone 3a Lite Price : சிறந்த அம்சங்களுடன் குறைந்த விலையில் Nothing Phone
-
Blind Women's T20 World Cup: உலகின் முதல் சாம்பியனாக வரலாறு படைத்தது இந்தியா!
-
IQOO 15 Price In India : iQOO 15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?