Ayalaan Movie Release Date : தீபாவளி ரேஸிலிருந்து வெளியேறிய 'அயலான்'

Ayalaan Movie Release Date

நீண்ட நாள் காத்திருப்பிற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அயலான்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதியை (Ayalaan Movie Release Date) படக்குழு அறிவித்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அயலான்’. இப்படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்தனர். ஆனால் படத்தின் வெளியீடு தொடர்ந்து தாமதமாகி வந்த நிலையில், படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவித்தனர். இந்நிலையில், ‘அயலான்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி (Ayalaan Movie Release Date) குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் நுழைந்து தற்போது உச்ச நடிகராக வளர்ந்துள்ளார். கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் இவர் நடித்த ‘மாவீரன்’ படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. சிவகார்த்திகேயன், பிரபல இயக்குனர் மிஷ்கின், பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி, சரிதா, யோகி பாபு, சுனில் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை மடோன் அஷ்வின் இயக்கி இருந்தார். விஜய் சேதுபதி படத்திற்கு சர்ப்ரைசா குரல் கொடுத்தது இருந்தது. பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்ற படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் தற்போது உலக நாயகனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ‘SK 21’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் நடித்த ‘அயலான்’ படத்தின் வெளியீட்டுக்கான பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இயக்குனர் ரவிக்குமாரின் இரண்டாவது படைப்பான அயலான் படத்திற்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர்.

கொரோனாவுக்கு முன் தொடங்கிய இப்படம் தொடர்ந்து தள்ளிப் போய் கொண்டே இருக்கிறது. இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கிராபிக்ஸ் பணிகள் தாமதம் ஆவதால் ‘அயலான்’ படம் திட்டமிட்ட தேதியில் வெளியாகாது என ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. இந்நிலையில், ‘அயலான்’ படம் பொங்கலுக்கு வெளியாகும் (Ayalaan Movie Release Date) என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த முறை படத்தின் ரிலீஸ் மிஸ் ஆகாது என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். இந்தியாவில் உருவாகும் முதல் ஏலியன், சயின்ஸ், பிக்சர் மற்றும் கிராபிக்ஸ் படமாக பிரமாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது. ‘அயலான்’. சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகார், யோகி பாபு, கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ள ‘அயலான்’ படத்திற்கு இசைமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Latest Slideshows

Leave a Reply