Bakrid Festival 2024 : பக்ரீத் பண்டிகை - தியாக திருநாள்

ஆண்டுதோறும் உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று பக்ரீத்  பண்டிகை ஆகும். ஹஜ் பெருநாள் எனவும் இந்த பக்ரீத் பண்டிகை ஆனது அழைக்கப்படுகின்றது. ஹஜ் பெருநாள் எனப்படும் இந்த பக்ரீத் பண்டிகை ஆனது இறைவனின் தூதரான இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வோரு ஆண்டும் (அரபி மாதம்) துல்ஹஜ் 10-ம் நாள் (Bakrid Festival 2024) கொண்டாடப்படுகிறது. அரபு நாடுகளில் இந்த பக்ரீத் பண்டிகை ஆனது கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது.

இஸ்லாமியர்கள் 5 கடமைகளை முக்கியமாக செய்ய வேண்டும் என்று குர்ஆன் கூறுகிறது :

இஸ்லாத்தில் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் 5 கடமைகளை முக்கியமாக செய்ய வேண்டும் என்று குர்ஆன் கூறுகிறது.

  • அல்லாஹ்வை ஒரே இறைவனாகவும், முஹம்மது நபியை அவனது தூதராகவும் ஏற்றுக்கொள்வது கலிமா எனப்படுகிறது. இதுவே முதலாவது கடமை ஆகும்.
  • 5 வேளை தொழுகையை நிறைவேற்றுவது 2 வது கடமை ஆகும். 
  • ஜகாத் எனப்படும் ஏழைகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை வருமானத்தில் ஒரு பகுதியை தானம் செய்வது 3 வது கடமை ஆகும். 
  • ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் 29 அல்லது 30 நாட்கள் நோன்பு நோற்பது 4 வது கடமை  ஆகும்.
  • தங்கள் ஆயுளில் ஒரு முறையாவது அரபு மாதமான துல் ஹஜ்ஜில் பொருளாதாரமும், உடல் நலனும் இருப்பவர்கள் மக்காவுக்கு ஹஜ் யாத்திரை செய்வது  5 வது கடமை  ஆகும்.

இஸ்லாத்தின் பண்டிகைகள் ஆனது மேற்கூரிய கடமைகளில் 2 முக்கிய கடமைகளை மையப்படுத்தி கொண்டாடப்படுகின்றன :

  • ரமலான் மாதத்தில் நோன்பு நோற்று முடித்தவுடன் கொண்டாடப்படும் ஈதுல் பித்ர் எனப்படும் ரம்ஜான் ஒரு பண்டிகை ஆகும். ஷவ்வால் மாதத்தின் முதல்நாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்கள் அந்த ரம்ஜான் பண்டிகை நாளில் ஏழைகளுக்கு தேவையான அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்குவது வழக்கம்.
  • இஸ்லாத்தின் 5 வது கடமையான ஹஜ்ஜை மையப்படுத்தி துல் ஹஜ் மாதம் கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகை 2வது பண்டிகை ஆகும்.

Bakrid Festival 2024 :

தியாகப் பெருநாள் எனப் பொருள்படும் அரபிய பதமான, ‘ஈத் அல்-அதா’ என்றே இந்தப் பண்டிகை உலகம் முழுவதும் அழைக்கப்படுகிறது. இந்தப் பண்டிகை ஆட்டை பலியிடுவதை அடிப்படையாக கொண்டு பக்ரீத் (பக்ரா-ஆடு + ஈத்-பெருநாள்) என்ற உருது பதத்தில் அழைக்கப்படுகின்றது. இறைத்தூதர் இப்ராஹிம் அவரது மகன் இஸ்மாயில் ஆகியோரின் தியாகத்தை நினைவுபடுத்தும் விதமாக உலக அளவில் இஸ்லாமியர்களால் இந்த ஹஜ் பெருநாள் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாமியர்களின் தூதுவராக நம்பப்படுபவர்களில் ஒருவரான  இப்ராஹிம் ஈராக்கில் வாழ்ந்து வந்ததார். இவருக்கு நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்தது. இறுதியில் இப்ராஹிமிக்கு இறைவன் அருளால் அவரின் இரண்டாவது மனைவி ஸாரா மூலம் ஒரு ஆண் மகன் பிறந்தது. இப்ராஹிம் அந்த குழந்தைக்கு இஸ்மாயில் என பெயரிட்டு வளர்த்து வந்தார். இஸ்மாயில் வளர்ந்து பால்ய பருவத்தை அடைந்தபொழுது, இப்ராஹிமிக்கு ஒரு கனவு வந்தது. அந்த கனவில் கடவுள் தோன்றி இஸ்மாயிலை தனக்கு பலியிடுமாறு இப்ராஹிமிக்கு கட்டளையிட்டார். இந்த கனவு பற்றி இப்ராஹிமின் இஸ்மாயிலிடம் கூறியபோது அவர் தன்னை கடவுளுக்கு பலியிட சம்மதித்தார்.

இப்ராஹிமின் தனது மகனின் அனுமதியோடு பலியிட துணிந்தபொழுது, கடவுள் ஜிப்ரில் என்னும் வானவரை அனுப்பி இப்ராஹிமைத் தடுத்து நிறுத்தினார். மேலும் கடவுள் ஒரு ஆட்டை இறக்கி இஸ்மாயிலுக்கு பதில் அந்த ஆட்டை அறுத்து பலியிடுமாறு இப்ராஹிமிற்கு கட்டளையிட்டார். சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இந்த மேற்கூரிய சம்பவத்தின் அடிப்படையிலேயே தியாக திருநாள் ஆனது கொண்டாடப்படுகின்றது.

பக்ரீத் பண்டிகை கொண்டாடும் விதம் :

பக்ரீத் பண்டிகை நாளில் இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து சிறப்புத்தொழுகைகள் நடத்துவர். அதன்பின் இஸ்லாமியர்கள் தங்கள் வீட்டிகளில் ஆடு, மாடு மற்றும் ஒட்டகம் போன்றவற்றை பலியிடுவார்கள். இவ்வாறு பலியிடப்படும் ஆடு, மாடு, மற்றும் ஒட்டகம் போன்றவை ஊனம் இல்லாமலும், குறைந்தபட்சம் ஒரு வயது பூர்த்தியானதாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்படுகின்றது. இறைவனின் பெயரால் பலியிட்ட அவற்றை மூன்று சம பங்குகளாக பிரித்து, ஒரு பங்கை அக்கம் பக்கம் உள்ள அண்டை வீட்டாளர்களுக்கும், நண்பர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுப்பர். தங்கள் தேவைகளுக்கு மூன்றாவது பங்கை பயன்படுத்துவர். இந்த பக்ரீத் பண்டிகையை தியாகப் பெருநாள் மற்றும் ஈகைத் திருநாள் என்றும் கூறுவார்கள். உலகம் முழுவதும் இஸ்லாமிய பெருமக்கள் இந்த பண்டிகையை (Bakrid Festival 2024) கொண்டாட தயாராகி வருகிறார்கள்.

Latest Slideshows

Leave a Reply