Billa Re-release : அஜித் நடித்த பில்லா ரீ ரிலீஸ்

பிளாக் பஸ்டர் ஹிட்டான ‘பில்லா’ திரைப்படம் நடிகர் அஜித்தின் பிறந்தநாளான மே 1 ஆம் தேதி மீண்டும் (Billa Re-release) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ரீ-ரிலீஸ் தமிழ் சினிமாவில் டிரெண்டாகி வருகிறது. கடந்த காலங்களில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படங்கள் தற்போது மீண்டும் வெளியாகி வருகிறது. அந்த படங்கள் இன்றைய ரசிகர்கள் மத்தியில் இவ்வளவு வரவேற்பை பெறுமா என்பது ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அந்த எண்ணங்கள் அனைத்தும் உடைந்து படம் மறுவெளியீட்டை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

என்னதான் நட்சத்திர நடிகர்களின் பெரிய பட்ஜெட் படங்கள் அடுத்தடுத்து  வெளியாக இருந்தாலும் எத்தனை வருடங்கள் ஆனாலும் பழைய படங்கள் எவர்கிரீன் படங்களாகவே ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் வாரணம் ஆயிரம், சிவா மனசுல சக்தி, விண்ணைத்தாண்டி வருவாயா, 3 உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்கள் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று எதிர்பார்த்ததை விட பல மடங்கு வசூல் செய்தது. நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கில்லி’ திரைப்படம் தரணியின் மறுவெளியீட்டை உலக அளவில் ரசிகர்கள் கொண்டாடினர். 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியான இப்படம் தற்போது 20 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Billa Re-release :

நடிகர் அஜித்தின் பிறந்தநாளான மே 1 ஆம் தேதி விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், நயன்தாரா, நமீதா, பிரபு, சந்தானம் மற்றும் பலர் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான ‘பில்லா’ திரைப்படம் மீண்டும் (Billa Re-release) வெளியாகவுள்ளது. அஜித்தின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய பில்லா, கிட்டத்தட்ட 175 நாட்கள் வெற்றிகரமாக ஓடி அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையைப் பெற்றது.

1980ல் ரஜினிகாந்த், ஸ்ரீப்ரியா, தேங்காய் சீனிவாசன் மற்றும் பலர் நடித்த ‘பில்லா’ பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அந்த காலகட்டத்தில் திரையரங்குகளில் 250 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்ற படம் 17 ஆண்டுகளுக்கு பிறகு ரீமேக் செய்யப்பட்டது. ரஜினியின் ரீமேக் என்றாலும் அஜித்தின் பாணியில் உருவாகியுள்ள இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. பில்லா திரைப்படத்தின் ரீ ரிலீஸ் (Billa Re-release) அஜித் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக உள்ளது. அஜீத்-ஷாலினியின் 24வது திருமண நாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், இந்த சர்ப்ரைஸ் அறிவிப்பு ரசிகர்களுக்கு ட்ரீட்டாக வெளியானது. இப்படம் கிட்டத்தட்ட 150 திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply