Dheena Re release : கில்லி படத்தின் பேனர் கிழித்து அஜித் ரசிகர்கள் அட்டகாசம்

நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு தீனா திரைப்படம் ரீ ரிலீஸ் (Dheena Re release) செய்யப்பட்டுள்ளது. ரீ ரிலீஸ் கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள் கில்லி படத்தின் பேனரை கிழித்து அட்டகாசம் செய்து வருகின்றனர்.

Dheena Re release :

கடந்த இரண்டு வாரங்களாக கில்லி திரைப்படம் திரையரங்குகளில் அமோக வசூலில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது தீனா ரீ ரிலீஸை (Dheena Re release) முன்னிட்டு தியேட்டருக்கு வந்த அஜித் ரசிகர்கள் கில்லி பேனரை கிழிக்கும் சம்பவங்கள் நடந்து உள்ளது. மேலும் ரீ-ரிலீஸ் கொண்டாட்டம் என்ன என்று போட்டி போட்டுக்கொண்டு ரோகினி தியேட்டருக்குள் பட்டாசு வெடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர் அஜித் ரசிகர்கள். கில்லி ரீ ரிலீஸ் ஆகி கொண்டாட்டங்கள் நடந்தாலும் இதுவரை அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கவில்லை. ஆனால் அஜித்தின் ரசிகர்கள் எல்லை மீறுவதாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

நடிகர் அஜித்குமாரின் 53வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. நடிகர் அஜித் நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளியான தீனா திரைப்படம, தற்போது அவரது 53 வது பிறந்தநாளை முன்னிட்டு தீனா திரைப்படம் மீண்டும் ரீ ரிலீஸ் (Dheena Re release) செய்யப்பட்டுள்ளது. கில்லி ரீ ரிலீஸ் வசூலை எப்படியாவது முறியடிக்க வேண்டும் என்ற முயற்சியில் அஜித் ரசிகர்கள் முதல் நாளே தியேட்டர்களில் அலப்பறை செய்து வருகின்றனர். அஜீத் குமார் நடித்த தீனா திரைப்படம் சென்னை ரோகினி தியேட்டரில் வெளியான நிலையில், “வத்திக்குச்சி பத்திக்காதுடா” பாடலைப் பார்த்து அஜீத் ரசிகர்கள் தியேட்டரில் பட்டாசு வெடித்து கொண்டாடும் காட்சிகள் பகீரை கிளப்பியுள்ளது. அஜித் ரசிகர்கள் 100 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே வந்து தியேட்டரை நாசம் செய்வதாக பலரும் குற்றச்சாட்டை எழுப்பி வருகின்றனர்.

கில்லி பேனர் கிழிப்பு :

தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் வெளியான கில்லி திரைப்படம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் செய்யப்பட்டு இரண்டு வாரங்களாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், தீனா படம் நேற்று ரீ ரிலீஸ் (Dheena Re release) செய்யப்பட்ட நிலையில், படத்தைப் பார்க்க வந்த அஜித் ரசிகர்கள் சென்னையில் உள்ள காசி திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த விஜய்யின் கில்லி படத்தின் பேனரை கிழிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இது விஜய் ரசிகர்களை கோவப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது, அஜித்குமார் நடித்த துணிவு படத்தின் முதல் நாள் கொண்டாட்டத்தின் போது, வாகனத்தில் நடனமாடிய ரசிகர் ஒருவர் கீழே விழுந்து இறந்தார். அஜித் ரசிகர்கள் கில்லி திரைப்படத்தின் பேனரை கிழித்த நிலையில், விஜய் மற்றும் அஜித் ரசிகர்களின் இடையில் சண்டை ஏற்பட்டால் என்ன நடக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. படத்தை படமாக பார்க்காமல் ரீ-ரிலீஸ் கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள் பிரச்சனையை கிளப்புவதாக விஜய் ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply