Pushpa 2 First Single : புஷ்பா 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் (Pushpa 2 First Single) வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஆகஸ்ட் 15 ஆம் தேதி படம் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது.
புஷ்பா :
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு புஷ்பா திரைப்படம் வெளியானது. இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பான் படமாக வெளியானது. ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில், ஜெகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் மற்றும் பலர் இப்படத்தில் நடித்தனர். படத்தில், லாரி டிரைவராக இருந்த அல்லு அர்ஜுன், தனது எதிரிகள் அனைவரையும் தோற்கடித்து, செம்மரக்கடத்தலில் மன்னனாகவே மாறிவிட்டார். முதல் பாகத்தில் அல்லு அர்ஜுனின் உடல் மொழி, பேச்சு என சும்மா தரமாக இருந்தது. இப்படம் உலகம் முழுவதும் 400 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
புஷ்பா 2 :
முதல் பாகத்தின் வெற்றிக்குப் பிறகு புஷ்பா-தி ரூல் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், அல்லு அர்ஜுன் காளி வேடமணிந்து, காதில் கம்மல், வளையல் புடவை என ஆக்ரோஷமான காளியாகவே மாறியிருந்தார். இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இரண்டாம் பாகத்தில், அல்லு அர்ஜுன் சிண்டிகேட் தலைவராக ஆன பிறகு அதிரடி ஆக்ஷன் இடம்பெறும் என்று தெரிகிறது. முக்கியமாக அல்லு அர்ஜுனுக்கும் ஃபஹத் பாசிலுக்கும் இடையிலான மோதல் ஒரு தரமான அதிரடி விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகத்தில் இருந்த நடிகர்களுடன் ஜெகபதிபாபு மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் இணைந்துள்ளனர்.
Pushpa 2 First Single :
முதல் பாகத்தில் ஸ்ரீவல்லி, ஊ சொல்ரியா மாமா, ஏய் சாமி பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்து படத்தின் வெற்றிக்கு வழிவகுத்தது, புஷ்பா 2 படத்தின் பாடல்கள் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புஷ்பா 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் (Pushpa 2 First Single) தற்போது வெளியாகியுள்ளது. புஷ்பா..புஷ்பா…புஷ்பா ராஜ் பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார், விவேகா வரிகளை எழுதியுள்ளார், நாகேஷ் அஷிஷ் மற்றும் தீபக் ப்ளூ இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Latest Slideshows
-
Google Cloud India : இந்தியா உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்று
-
Thug Life Trailer : கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு
-
TN Leads In Higher Education : தமிழ்நாடு உயர்கல்வி சேர்க்கையில் 47% பெற்று முன்னிலை வகிக்கிறது
-
Thuthikkeerai Benefits In Tamil : துத்திக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
-
Jadeja Is Ranked 1152 In The ICC Rankings : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ஜடேஜா 458 புள்ளிகளுடன் 1152-வது நாளாக முதலிடம் நீடிப்பு
-
TNGECL Introduced 3 New Internet Services : TNGECL ஒரே நேரத்தில் 3 வகையான இணையதள சேவையை துவக்கி உள்ளது
-
Vasanth & Co Retail Success Story : நடுத்தர வர்க்க கனவுகளை தவணைகளில் நிறைவேற்றிய வசந்த் & கோ-வின் வெற்றி பயணம்
-
Tribute To Soldiers Of India : இளையராஜா X தளத்தில் இந்திய ராணுவ வீரர்களுக்கு பாராட்டு
-
SBI Circle Based Officer Recruitment : எஸ்பிஐ வங்கியில் 50 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
NFBD Champ Awards 4.0 : நம்ம பேமிலி குரூப் நடத்தும் பிரமாண்ட விருது வழங்கும் விழா