Gangstaa - துணிவு 3வது சிங்கள்

இயக்குனர் எச்.வினோத் அவர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள “துணிவு” படத்தில் “அஜித்” அவர்கள் கதை நாயகனாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாக உள்ளது. இந்த படமானது விஜய் நடிக்கும் “வாரிசு” படத்துடன் போட்டிபோட உள்ளது. இதனை தொடர்ந்து இந்த படத்தில் ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளிவந்து உள்ளது. இந்த இரண்டு பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. துணிவு படத்தின் மூன்றாவது சிங்கள் பாடல் வெளியாவது குறித்து சில நாட்களுக்கு முன்பாக படக்குழுவால் தேதி அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து படத்தின் மூன்றாவது சிங்கிள் படலானது நேற்று “டிசம்பர் 25” மாலை வெளியாகியுள்ளது.

Gangstaa - Platformtamil

மூன்றாவது சிங்கள் பாடலான “Gangstaa” பாடலை விவேகா அவர்கள் எழுதியுள்ளார். ஜிப்ரான் இசையில் சக்தி வாய்ந்த பாடலின் வரிகளாக அமைந்துள்ளது. இந்த பாடலை ஷபீர் சுல்தான் மற்றும் ஜிப்ரான் இருவரும் சேர்ந்து இந்த பாடலை பாடியுள்ளனர். பாடல் வெளியானதிலிருந்து இதுவரை 2.8 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இது மட்டுமல்லாமல் அஜித் ரசிகர்கள் இந்த பாடலை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் துணிவு படத்தின் அஜித்தின் அறிமுக பாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் எச். வினோத் அவர்கள் சமீபமாக ஒரு பேட்டியில் படத்தில் மேலும் ஒரு பாடல் உள்ளது. படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு ஜனவரி முதல் வாரத்தில் சென்னையில் நடைபெறும் மற்றும் தெலுங்கில் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியை நடத்துவதாக படக்குழு திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Latest Slideshows