ஹூவாய் நிறுவனம் HUAWEI Nova 12 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது

ஹூவாய் நோவா 12 அம்சங்கள் (Huawei Nova 12 Specifications) :

  • Huawei Nova 12 Display : இந்த ஹூவாய் போனில் 6.7 இன்ச் (2412 × 1084 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. மேலும் இது ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவாகும். இந்த வகை டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 300Hz டச் சாம்பிளிங் ரேட் 1.07 பில்லியன் கலர் மற்றும் பி3 வைடு கலர் காமட் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஹூவாய் போனில் ஹர்மோனி ஓஎஸ் 4.0 (Harmony OS 4.0) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி 4ஜி (Qualcomm Snapdragon 778G 4G) சிப்செட் வருகிறது. இதனுடன் அட்ரினோ 642எல் ஜிபியு (Adreno 642L GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

  • Huawei Nova 12 Storage &  Camera : இந்த HUAWEI Nova 12 போனில் 256GB  மெமரி மற்றும் 512GB மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த போனில் 50MB சூப்பர்சென்சிங் (Super-Sensing Camera) வருகிறது. அதோடு 8MB அல்ட்ரா வைடு ஆங்கிள் மேக்ரோ கேமரா + 12MB டெலிபோட்டோ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவில் 5X ஆப்டிகல் ஜூமிங் மற்றும் 10X டிஜிட்டல் ஜூமிங் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி  உடன் வெளிவந்துள்ளது. மேலும்  நைட் சீன் (Night Scene) போர்ட்ராய்டு (Portrait) வாய்ஸ் ஆக்டிவேடெட் போட்டோ (Voice-Activated Photo) போர்ட்ராய்டு போகஸ் டிராக்கிங் (Portrait Focus Tracking) போன்ற சிறப்பம்சங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது.

  • Huawei Nova 12 Battery : இந்த ஹூவாய் ஸ்மார்ட் போனில் கேமராவை போலவே பேட்டரி சிஸ்டமும் மிரள வைக்கிறது. 100W ஹூவாய் சூப்பர்சார்ஜ்  (HUAWEI Supercharge) சப்போர்ட் கொண்ட 5600mAh பேட்டரி கொண்டுள்ளது. 6.98 mm  அல்ட்ரா ஸ்லிம் டிசைனில் 191 கிராம் எடையுடன்  ஹூவாய் போன் விற்பனைக்கு வந்துள்ளது.  இதற்கு டைப்-சி சார்ஜிங் வருகிறது.

  • Huawei Nova 12 Rate : இந்த போனின் 256GB மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.34,917/- ஆகவும் 512GB மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.39,574/- ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு ப்ரீஆர்டருக்கு வந்த ஒரே நாளில் முழுவதும் விற்று தீர்ந்தது. இந்த HUAWEI Nova 12 போனின் விற்பனையானது இந்தியாவில்  ஜனவரி 5 ஆம் தேதி தொடங்குகிறது.

Latest Slideshows

Leave a Reply