Kanavu Thozhirsalai Book Review : கனவுத் தொழிற்சாலை - செல்லுலாயிட் சினிமா உலக நாவல்

சுஜாதா தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர். இவரது இயற்பெயர் ரங்கராஜன் ஆகும். எழுத்துத் துறையில் ஏற்பட்ட பெயர் குழப்பம் காரணமாக தன் மனைவி பெயரான, ‘சுஜாதா’வை தன் புனைபெயராக வைத்துக் கொண்டார். இவர் சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள், புதினங்கள், இலக்கியம் மற்றும் தமிழ்ச் செவ்விலக்கியம் என்று பல வகைகளிலும் இருநூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். ஒரு சிறந்த கவிதைத் தொகுப்பும் படைத்துள்ளார். திரைப்பட கதை-வசனங்கள் எழுதியுள்ளார். 1953 ஆம் ஆண்டு இவரின் முதல் கதை ஆனது சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது.

தமிழக அரசு சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி, அவருக்கு கலைமாமணி விருதை வழங்கி உள்ளது. இவர் திருச்சி St.Joseph’s College-ல் B.Sc. (Physics) படிப்பை முடித்தார். மறைந்த பிரதமர் அப்துல் கலாம் இவரது வகுப்பு தோழன் ஆவார். அதன் பின்னர் சென்னை MIT-யில் B.E. (Electronics) படித்தார். இவர் 14 ஆண்டுகள் அரசுப் பணியில் பணியாற்றிய பின்னர் பெங்களூரு BEL நிறுவனத்தில் சேர்ந்தார்.  அங்கு பல்வேறு பொறுப்புகளிலும் பணியாற்றினார். பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஆனது (BEL) மின்னணு வாக்குப் பதிவுப் பொறியை உருவாக்க முக்கியக் காரணமாக இருந்தவர் ஆவார். இவருக்கு இப்பொறியை உருவாக்கியதற்காக Vasvik Award வழங்கப்பட்டது. சுஜாதா, 2008ல் மறைந்தார். அவரது இரு மகன்களும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.

Kanavu Thozhirsalai Book Review - கனவுத் தொழிற்சாலை நாவல் :

இந்த கனவுத் தொழிற்சாலை நாவல் ஆனது சினிமா உலகத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட  நாவல் (Kanavu Thozhirsalai Book Review) ஆகும். 1979 ஆம் ஆண்டில் ஆனந்த விகடனில் தொடராக வந்தது. சினிமா உலகத்தைப் பற்றிய கற்பனைக் கதையில் ஆசைகளும் ஏமாற்றங்களும் அழகாக கலக்கப்பட்டு உள்ளது. பளபளப்பான சினிமா உலகத்து மக்களின் மோசமான பாகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தும் ஒரு நாவல் ஆகும். இந்த கனவுத் தொழிற்சாலை கதை ஒரு கதாபாத்திரத்திலிருந்து அடுத்த கதாபாத்திரத்திற்கு எளிதாக மாறுகின்றது.

அவர்களின் குணாதிசயங்கள் மற்றும் அவர்களின் துயரங்கள் ஒரு Cut Throat உலகத்துடனான தொடர்புகளின் கூட்டுத்தொகையாக எழுதப்பட்டு உள்ளது. உணர்ச்சி வசப்பட்ட மக்கள் பிறரின் யதார்த்தத்தில் ஆழமாக மூழ்கியிருக்கிறார்கள். ஒரு செல்லுலாயிட் சினிமா உலகின் நன்மைகள், தீமைகள், சத்தியம், அசத்தியம், நேர்மை, நேர்மையின்மை என அனைத்தையும் தெள்ளத் தெளிவாக இந்த கதை உணர்த்துகிறது. இந்த கனவுத் தொழிற்சாலை நாவலில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்களுக்கு எட்டாத ஒன்றை விரும்புகிறார்கள். எதிர்பாராத விதமாக முட்டுச்சந்துகளாக மாறும் சந்துகள், திடீரென்று திறக்கும் கதவுகள் என இந்த கதை செல்கிறது.

புகழின் உச்சத்திலிருந்து வீழ்ந்து விடுவோமா என்று பயப்படுகின்ற சூப்பர் ஸ்டார் அருண், அவனை விரும்புகின்ற சக நடிகை ப்ரேமலதா, அவர்களின் ஆரம்ப கால அவலங்கள், இக்கட்டான சூழ்நிலைகள், நேரங்கள் மற்றும் அவர்களின் சொந்த விருப்பமும் கூட அழகாக எழுதப்பட்டு உள்ளது. கனவுத் தொழிற்சாலை கதையின் போக்கில், சில சமயங்களில் எழுத்தாளர் சுஜாதாவின் எழுத்தில் சூரியன்கள் ஏறக்குறைய எட்டும் தூரத்தில் இருப்பது போல இழப்பு மற்றும் ஆதாயம் என்ற பேரத்துடன் போராடி, கதை முன்னோக்கி நகர்கிறது. ஆனால் ஒரு எழுத்தாளராக சுஜாதாவின் பலம், தனிமனித விருப்பத்தின் வலிமையை அழகாக சித்தரிக்கும் திறனும் மற்றும் அதேநேரத்தில் உலகின் புரிந்துகொள்ள முடியாத பரந்த தன்மையுடன் ஒப்பிட்டு அதை முன்னோக்கி அழகாக சித்தரிக்கும் திறனும் அற்புதம் ஆகும். எழுத்தாளர் சுஜாதா தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் பல வாசகர்களை கவர்ந்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply