KKR Wins Over LSG : லக்னோ அணியை நொறுக்கிய கொல்கத்தா

கொல்கத்தா :

2024 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நிர்ணயித்த 162 ரன்கள் இலக்கை 15.4 ஓவர்களில் அடைந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR Wins Over LSG) அபார வெற்றியைப் பதிவு செய்தது. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் தனது அதிரடியால் லக்னோ அணியை அலற வைத்தார். அவர் 14 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் மொத்தம் 17 பவுண்டரிகளை அடித்து போட்டியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கொண்டு சென்றார்.

KKR Wins Over LSG - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் :

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய கே.எல்.ராகுல் 27 பந்துகளில் 39 ஓட்டங்களையும், நிக்கோலஸ் பூரன் 32 பந்துகளில் 45 ஓட்டங்களையும் பெற்றனர். மற்ற பேட்ஸ்மேன்கள் மிகக் குறைந்த ரன்களே எடுத்தனர். ஆயுஷ் படோனி 29 ரன்கள் சேர்த்தார் ஆனால் 27 பந்துகள் எடுத்தார். அந்த அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் சேர்த்தது. அடுத்து கொல்கத்தா அணி சேஸிங் செய்தது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அதிரடி ஆட்டக்காரர் சுனில் நரைன் ஆறு ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ரகுவன்ஷி 7 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் நிதானமாக பேட்டிங் செய்து விக்கெட் சரிவை தடுத்தார்.

மறுபுறம், பில் சால்ட் 47 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தார். அவர் 14 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களை விளாசினார். அவரது ஸ்டிரைக் ரேட் 189. பில் சால்ட்டின் விக்கெட்டை வீழ்த்த லக்னோ அணி தொடர்ந்து முயற்சித்தும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. ஷ்ரேயாஸ் ஐயர் 38 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 15.4 ஓவரில் வெற்றி (KKR Wins Over LSG) பெற்றது. இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தான் விளையாடிய 5 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றுள்ளது.

கே.எல்.ராகுல் :

தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்ததால் கவலைப்படவில்லை என லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார். கொல்கத்தா அணி 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. இந்த தோல்வி குறித்து பேசிய லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், “இந்த மோசமான தோல்வி இந்த நாளையே வீணடித்து விட்டது” என்றார். அப்படிப்பட்ட ஒரு நாள் இது. இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஐபிஎல் தொடரின் ஒரு கட்டத்தில், ஒவ்வொரு அணியும் இந்த மாதிரியான சூழ்நிலையில் விழுவதை நாம் பார்த்திருக்கிறோம். கண்டிப்பாக தவறை திருத்தி அடுத்த போட்டிகளில் மீண்டும் களமிறங்குவோம்.

நாங்கள் பந்துவீசும்போது பந்து கையை விட்டு நழுவத் தொடங்கியது. மேலும் பேட்டிங்கிலும் எங்களது ஷாட்கள் சரியாக செயல்படுத்தப்படவில்லை. கொத்து கொத்தாக விக்கெட்டுகளை இழந்து விட்டோம். கூடுதல் ரன்களைச் சேர்க்கத் தவறியதால் ஆட்டத்தைத் தவறவிட்டேன் என்று நினைக்கிறேன். ஷமர் ஜோசப் சிறப்பான வேகத்தில் பந்து வீசுகிறார். ஒரு இளம் வீரருக்கு ஐபிஎல் தொடரின் முதல் போட்டி என்பதால் இது போன்ற தவறுகள் நடப்பது சகஜம். அவர் இன்னும் சில நிலைத்தன்மையுடன் பணியாற்ற வேண்டும். 2 தொடர் தோல்விகளால் எங்களுக்கு எந்த பயமும் இல்லை, பதட்டமும் இல்லை. கடந்த 2 போட்டிகளில் எங்கு தவறு நடந்தது என்பதை கண்டறிய வேண்டும். அதேபோல் கடந்த 2 போட்டிகளிலும் நாங்கள் பேட்டிங்கில் 160 ரன்கள் எடுப்பது கடினமாக இருந்தது. இதனை சரி செய்ய வேண்டும் என எண்ணுகிறேன் என்றார்.

Latest Slideshows

Leave a Reply