Mitchell Starc அபார பந்துவீச்சு | லக்னோ அணியை சுருட்டினார்

கொல்கத்தா :

ரூ.24.75 கோடிக்கு கே.கே.ஆர் அணியால் வாங்கப்பட்ட Mitchell Starc, லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஐபிஎல் தொடரின் 28வது லீக் ஆட்டத்தில், லக்னோ அணியை எதிர்த்து கொல்கத்தா அணி விளையாடியது. டாஸ் வென்ற கே.கே.ஆர் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களம் இறங்கிய லக்னோ அணிக்கு டி காக் – கேஎல் ராகுல் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. 24.75 கோடிக்கு கேகேஆர் அணியால் வாங்கப்பட்ட மிட்செல் ஸ்டார்க் முதல் ஓவரை வீசினார்.

Mitchell Starc :

இந்த சீசனில் மிட்செல் ஸ்டார்க்கின் ஆட்டங்கள் ரசிகர்களால் பெரிதாக கொண்டாடப்படவில்லை. 24.75 கோடிக்கு வாங்கப்பட்டதால், ஆட்டத்தையே திருப்பக்கூடிய சிறப்பான பந்துவீச்சை அவரிடமிருந்து ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில் இன்றைய ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே 2 பவுண்டரிகள் உட்பட 10 ரன்கள் விட்டுக்கொடுத்தார். தொடர்ந்து வீசப்பட்ட 2வது ஓவரில் 8 ரன்கள் எடுத்த நிலையில், 3வது ஓவரில் லக்னோ கேப்டன் கே.எல்.ராகுலின் விக்கெட்டை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். அந்த ஓவரில் 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதன் பிறகு, கடைசி ஓவரை வீச Mitchell Starc மீண்டும் அழைக்கப்பட்டார். லக்னோ அணிக்கு அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் தயாராக இருந்தார்.

ஸ்டார்க்கின் கடைசி ஓவரின் முதல் பந்தில் நிக்கோலஸ் பூரன் 45 ரன்களில் ஆட்டமிழந்தார், அதைத் தொடர்ந்து கடைசிப் பந்தில் 142 கிமீ யார்க்கரில் அசத்தினார். இதை எதிர்கொள்ள முடியாமல் திணறிய அர்ஷத் கான் அந்த ஓவரில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆகி வெளியேறினார். இதனால் லக்னோ அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் மட்டுமே சேர்த்தது. சிறப்பாக பந்து வீசிய மிட்செல் ஸ்டார்க் 4 ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 13 டாட் பால்கள் உட்பட 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் 24.75 கோடிக்கு ஏலம் போன மிட்செல் ஸ்டார்க் இன்று தான் சிறப்பாக செயல்பட்டதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply