DRDO புதிய Man Portable Anti Tank Guided Missile என்ற Anti-Tank ஏவுகணை சோதனை

Man Portable Anti Tank Guided Missile :

மேன் போர்ட்டபிள் ஆன்ட்டிடேங்க் கைடட் மிஸைல் (Man Portable Anti Tank Guided Missile) என்ற ஏவுகணை DRDO உருவாக்கி சோதனை செய்துள்ளது. இது முழுக்க பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (Defence Research And Development Organization) உருவாக்கப்பட்டுள்ள ஒரு ஆயுத அமைப்பாகும்.

நவீன கவசத்தால் பாதுகாக்கப்பட்ட பிரதான போர் பீரங்கிகளை கொண்ட நாடுகளுக்கு இந்தியாவின் ஆன்ட்டி டேங்க் கைடட் மிஸைல் ஆனது ஒரு எச்சரிக்கை ஆகும். ஏனென்றால் இந்த Man Portable Anti Tank Guided Missile ஏவுகணையால் எம்பிடி டாங்கிகளை தோற்கடிக்க முடியும் என பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. இந்த ஆன்ட்டி டேங்க் கைடட் மிஸைலில் இரவு நேரங்களில் துல்லியமாக தாக்கும் திறன்களுடன் வடிவைக்கப்பட்டுள்ளது. இந்த MPATGM ஆயுத அமைப்பில் டூயல் மோட் சீக்கர் செயல்பாடும் உள்ளது. மேலும் இது டேங்க்குகளுக்கு இடையேயான போர் சூழ்நிலைகளில் அட்டகாசமான செயல்திறனை வெளிப்படுத்தும்.

ராஜஸ்தானில் உள்ள பொக்ரான் ஃபீல்ட் ஃபைரிங் ரேஞ்சில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த மிஸைல் எப்படி வேலை செய்யும் என்பது வெளிப்படுத்தப்பட்டது. இந்த மாத  தொடக்கத்தில் அக்னி ப்ரைம் பாலிஸ்டிக் ஏவுகணை (Agni Prime Ballistic Missile) சோதனையும் DRDO வெற்றிகரமாக செய்து முடித்தது. இந்த அக்னி ப்ரைம் ஏவுகணை என்பது அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கக்கூடிய வல்லமை கொண்ட இந்தியாவின் புதிய தலைமுறை ஏவுகணை ஆகும்.

ஒடிசா மாநில கடற்கரையில் அமைந்துள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து ஏவப்பட்டு வெற்றிகரமாக சோதனையும் (Man Portable Anti Tank Guided Missile) செய்யப்பட்டது. இந்த ஏவுகணை சோதனையின் போது அக்னி ப்ரைம் பாலிஸ்டிக் ஏவுகணையானது நம்பகமான செயல்திறனை உறுதிப்படுத்தும் அனைத்து வகையான சோதனைகளையும் பூர்த்தி செய்தது. இந்த தகவல் வெவ்வேறு இடங்களில் பயன்படுத்தப்பட்ட பல ரேஞ்ச் சென்சார்களால் கைப்பற்றப்பட்ட தரவுகளின் வழியாக உறுதியும் செய்யப்பட்து.

Latest Slideshows

Leave a Reply