இஸ்ரோ Chandrayaan 4 திட்டம் வரும் 2040 ஆம் ஆண்டின் நிலவில் தரையிறங்க இலக்கு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) இப்போது பல மிகப்பெரிய திட்டங்களை உருவாக்கி வருகிறது. இதில் முக்கிய கவனம் சந்திராயன்-4 (Chandrayaan 4) திட்டதிற்கு வழங்கப்பட்டுள்ளது. காரணம் சந்திராயன்-4 திட்டத்தில் 2 ராக்கெட்களை இஸ்ரோ அனுப்பவுள்ளது.

சந்திராயன்-4 (Chandrayaan 4) திட்டம் :

சந்திராயன்-4 ராக்கெட் எப்போது விண்ணில் பாயும் சந்திராயன்-4 எப்போது நிலவில் தரையிறங்கும் என்ற பல கேள்விகள் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டு வருகிறது. இஸ்ரோ தலைவர் செல்லும் இடமெல்லாம் இந்த கேள்வி தான் கேட்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் சிரித்த முகத்துடன் மௌனம் காத்த இஸ்ரோ தலைவர் சோமநாத் தற்போது பதிலளித்துள்ளார்.

சந்திராயன் (Chandrayaan 4) திட்டம் குறித்த முக்கியமான அப்டேட்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (Indian Space Research Organisation) தலைவர் திரு.எஸ் சோமநாத் தற்போது வெளியிட்டிருக்கிறார். சந்திரயான்-4 திட்டம் தற்போது என்ன நிலையில் உள்ளது என்ற கேள்விக்கு இஸ்ரோ தலைவர் சந்திரயான்-4 திட்டமானது “வளரும் பணியில்” உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.

சந்திரயான்-4  திட்டமானது மிகவும் முக்கியமான திட்டம் என்பதனால் ஒவ்வொரு கட்ட பணிகளும் பொறுமையாக பார்த்துப் பார்த்து பாதுகாப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் அறிவுறுத்தலின் படி சந்திரயான்-4 திட்டம் வரும் 2040 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நிலவில் தரையிறங்கும் இலக்கை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சந்திரயான்-4 திட்டத்தை வெற்றிகரமான திட்டமாக அமைக்க இஸ்ரோ தொடர்ச்சியாக பல ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

சந்திராயன்-4 மிஷனில் 2 ராக்கெட் :

ஒரே திட்டத்தில் 2 ராக்கெட்களை அனுப்புவது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். மேலும் இஸ்ரோ இந்த முறை 2 தனித்தனி ராக்கெட்களை ஒரே திட்டத்திற்காக பயன்படுத்தவுள்ளது. இந்தியாவின் நான்காவது நிலவு மிஷனில் (India’s 4th Moon Mission) மொத்தம் இரண்டு ராக்கெட்களை கொண்டிருக்கும் என்று ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. இந்த 4-வது மூன் மிஷனில் 5 பெலோட்களை இஸ்ரோ பயன்படுத்தவுள்ளது. கடந்த சந்திரயான்-3 திட்டத்தில் இஸ்ரோ வெறும் 3 பெலோட்களை பயன்படுத்தியது.

இதற்கு அடுத்தபடியாக சந்திரயான்-4 திட்டத்தில் இஸ்ரோ 5 பெலோட்களை பயன்படுத்தவுள்ளது. சந்திரயான்-4 திட்டம் மிகப்பெரியது என்பதால் இஸ்ரோ இந்த முறை 5 பெலோட்களை அனுப்பவுள்ளது. சந்திரயான் திட்டம் 2040 ஆம் ஆண்டில் விண்ணில் பாய முடிவு செய்யப்பட்டுள்ளதனால் அதே வருடத்தில் 40 நாள் பயணத்தை முடித்து சந்திராயன்-4 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply