Agni Prime Ballistic Missile Successfully Tested : இந்தியா அக்னி ப்ரைம் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது

அக்னி ப்ரைம் ஏவுகணை - Agni Prime Ballistic Missile Successfully Tested :

அக்னி ப்ரைம் ஏவுகணை என்பது அணு ஆயுதங்களை சுமந்து சென்று மிக துல்லியமாக தாக்கக்கூடிய வல்லமை கொண்ட இந்தியாவின் புதிய தலைமுறை ஏவுகணை ஆகும். சோதனை நோக்கத்திற்காக இது ஒடிசா மாநில  கடற்கரையில் அமைந்துள்ள அப்துல் கலாம் தீவில் (Abdul Kalam Island) இருந்து ஏவப்பட்டது. மேலும் இது நம்பகமான செயல்திறனை உறுதிப்படுத்தும் அனைத்து வகையான சோதனை நோக்கங்களையும் இந்த அக்னி ப்ரைம் ஏவுகணை பூர்த்தி செய்துள்ளது. இந்த தகவல் வெவ்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ள பல ரேஞ்ச் சென்சார்களால் கைப்பற்றப்பட்ட  தரவுகளின் வழியாக உறுதியும் செய்யப்பட்டுள்ளது.

2000 கி.மீ வரை தூரம் வரை பாயும் திறன் கொண்டது :

அக்னி பிரைம் அல்லது அக்னி-பி என்று அழைக்கப்படும் இந்த புதிய வகை ஏவுகணையானது அணுசக்தி திறன் கொண்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட புதிய தலைமுறை ஏவுகணை ஆகும். இது சுமார் 1,000 கி.மீ முதல் 2,000 கி.மீ வரை சென்று துல்லியமாக இலக்குகளை தாக்கக்கூடிய இரண்டு நிலைகளை கொண்ட கேனிஸ்டரைஸ்டு ஏவுகணை ஆகும்.

கோல்ட் லான்ச் மெக்கானிசம் :

இந்த அக்னி ப்ரைம் ஏவுகணை கேனிஸ்டரைஸ்டு ஏவுகணையாக இருப்பதால் உருளை வடிவத்திலான ஒரு பொருளுக்குள் இன்னொரு பொருளை வைத்திருக்கும் கொள்கலன் போன்ற ஒரு ஏவுகணையாக உள்ளதால் இதை சாலை மற்றும் ரயில் மூலம் வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல முடியும். மேலும் இந்த ஏவுகணையை நீண்ட காலத்திற்கு சேமித்து வைத்திருக்கவும் முடியும். இதன் மூலம் திடீர் தாக்குதலை எந்த நேரத்திலும் சமாளிக்க முடியும். அதுமட்டுமல்லாமல் முக்கியமாக இந்த ஏவுகணையானது ‘கோல்ட் லான்ச் மெக்கானிசம்’ மற்றும் ‘சால்வோ மோட்’-ன் கீழ் ஏவப்படும். கோல்ட் லான்ச் மெக்கானிசம் என்றால் ஏவுகணையில் இருந்து தனித்தனியாக எரிவாயு ஜெனரேட்டரால் உருவாக்கப்பட்ட வாயுவை பயன்படுத்தி அது வெளியேற்றப்படும். சால்வோ மோட் என்றால் ஒரே நேரத்தில் பல ஏவுகணைகளுக்கு எரிவாயு பாய்ச்சும் முறையாகும்.

50% எடை குறைவானது :

இந்த அக்னி ப்ரைம் ஏவுகணை ஆனது இதற்கு முன்னதாக உருவாக்கப்பட்ட அனைத்து அக்னி வகை ஏவுகணைகளையும் விட மிகவும் இலகுவானது. அக்னி 3 ஏவுகணையை விட குறைந்தது 50% குறைவான எடையை கொண்டது மற்றும் புதிய வழிகாட்டுதல் மற்றும் உந்துவிசை அமைப்புகளையும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அக்னி ப்ரைம் ஏவுகணையின் முதல் சோதனையானது கடந்த 2021-ம் ஆண்டில்  நடத்தப்பட்டது. பிறகு இரண்டாவது சோதனை அடுத்து ஆறு மாதங்களுக்கு கழித்து டிசம்பரில் நடத்தப்பட்டது. இதன் பின்னர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அக்னி ப்ரைம் ஏவுகணையின் முதல் நைட் லான்ச்சும் நடத்தப்பட்டது.

அக்னி-5 ஏவுகணையில் எம்ஐஆர்வி டெக்னாலஜி உள்ளது. எம்ஐஆர்வி என்பது (Multiple Independently Targetable Reentry Vehicle) என்பதன் சுருக்கமாகும். போர்க்கப்பல்களில் இருந்து எதிர்தாக்குதக்கலை ஒரே லான்ச்சில் நடத்த உதவும் தொழில்நுட்பமாகும். இந்த எம்ஐஆர்வி தொழில்நுட்பம் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், மற்றும் சீனா நாடுகளிடம் மட்டுமே இருந்தது. தற்போது அக்னி ஏவுகணை சோதனையின் (Agni Prime Ballistic Missile Successfully Tested) வெற்றியின் வழியாக இந்த பட்டியலில் நம் இந்தியாவும் சேர்ந்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply