NASA To Develop A Standard Time For The Moon : நாசாவுக்கு அமெரிக்காவின் வெள்ளை மாளிகை உத்தரவிட்டுள்ளது

NASA To Develop A Standard Time For The Moon :

சந்திரனுக்கு நிலையான நேரத்தை உருவாக்க நாசாவுக்கு அமெரிக்காவின் வெள்ளை மாளிகை (NASA To Develop A Standard Time For The Moon) உத்தரவிட்டுள்ளது. அதாவது “ஒருங்கிணைந்த லூனார் டைம்” (எல்.டி.சி) என்ற பெயரில் இதை உருவாக்க நாசா National Aeronautics And Space Administration  (NASA) உத்தரவிட்டுள்ளது. அதிகரித்து வரும் விண்வெளிப் பயணத்தை கருத்தில் கொண்டு விண்வெளியில் சர்வதேச விதிமுறைகளை அமைக்கும் அமெரிக்காவின் திட்டத்தின் ஒரு பகுதியாக இது கொண்டு வரப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை அலுவலகத்தின் Office Of Science And Technology Policy (OSTP) தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாசா விண்வெளி நிறுவனம் மற்ற அமெரிக்க அரசு அமைப்புகளுடன் இணைந்து “ஒருங்கிணைந்த சந்திர நேரம்” (எல்.டி.சி) அமைப்பதற்கான திட்டத்தை இரண்டு ஆண்டுகளில் கொண்டு வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த 2023-ல் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் சந்திரனுக்கு அதன் சொந்த நேர மண்டலத்தை வழங்குவதற்கான இது போன்ற திட்டங்களை அறிவித்தது. 2022 ஆண்டின் பிற்பகுதியில் நெதர்லாந்தில் உள்ள பல்வேறு விண்வெளி நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கு இடையிலான சந்திப்பின் போது இந்த யோசனை தோன்றியது. கூட்டத்தில் பங்கேற்றவர்கள் பொதுவான சந்திர குறிப்பு நேரத்தின் அவசரத் தேவையை (NASA To Develop A Standard Time For The Moon) ஒப்புக்கொண்டனர். விண்வெளியில் நேரத்தை அமைப்பது பற்றிய இந்த கேள்வியை கடந்த காலத்தில் நாசா கையாண்டது. அது சர்வதேச விண்வெளி நிலையத்திற்காக International Space Station (ISS)-க்கு அதன் சொந்த நேர மண்டலம் இல்லை என்றாலும் ஒருங்கிணைக்கப்பட்ட யுனிவர்சல் டைம் Coordinated Universal Time (UTC) ஆல் இயங்குகிறது.

மேலும் இது அணுக் கடிகாரங்களால் உன்னிப்பாக வைக்கப்படும் ஒரு தரநிலையாகும். யுனிவர்சல் டைம் ஐக்கிய மாகாணங்கள், ரஷ்யா, ஜப்பான் மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகள் பயன்படுத்தி வருகிறது. இதை ISS திட்டத்தில் உள்ள அனைத்து நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளது. பூமியை விட அதன் ஈர்ப்பு விசை பலவீனமாக இருப்பதால் கடிகாரங்கள் அங்கு வேகமாக இயங்கி வருகிறது சந்திரனில் ஒவ்வொரு நாளும் சுமார் 56 மைக்ரோ விநாடிகள் வேகமாக அதிகரித்து வருகிறது. சந்திரனில் ஒரு நாள் சுமார் 29.5 பூமி நாட்கள் நீடிக்கும். இதனால்தான் NASA மற்றும் பிற நிறுவனங்கள் “Coordinated Lunar Time” or the “Lunar Standard Time” அமைப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றன.

Latest Slideshows

Leave a Reply