MHRIL Plans 3 Greenfield Resorts in TN : MHRIL தமிழ்நாட்டில் கிரீன்ஃபீல்ட் ரிசார்ட்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது
MHRIL plans 3 greenfield resorts in TN Nadu at a cost of ₹800 crore. இந்தியாவிலும் வெளிநாட்டிலும் 125-க்கும் மேற்பட்ட ஓய்வு விடுதிகளை க்ளப் மஹிந்திராவின் நெட்ஒர்க் உள்ளடக்கியது மற்றும் 2.9 லட்சம் உறுப்பினர்களின் வலுவான தளத்தைக் கொண்டுள்ளது. மஹிந்திராஹாலிடேஸ் & ரிசார்ட்ஸ் இந்தியா லிமிடெட் (MHRIL) தமிழகத்தில் 3 கிரீன்ஃபீல்ட் ரிசார்ட்டுகளைக் அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் கட்டுவதற்காக ரூ.800 கோடி முதலீடு செய்யப்போவதாக தெரிவித்துள்ளது. மஹிந்திராஹாலிடேஸ் & ரிசார்ட்ஸ் இந்தியா லிமிடெட் (MHRIL) நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டங்களின் ஒரு பகுதியாகும். MHRIL கடந்த 2023-ஆம் ஆண்டு உத்தரகாண்டில் ரூ.1,000 கோடி முதலீடு செய்ததைத் தொடர்ந்து இது MHRIL-ன் இரண்டாவது பெரிய முதலீடாக இருக்கிறது. 1,500 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
MHRIL Plans 3 Greenfield Resorts in TN : 2030 ஆம் ஆண்டிற்குள் MHRIL தமிழ்நாட்டில் கிரீன்ஃபீல்ட் ரிசார்ட்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது
“மஹிந்திராஹாலிடேஸ் & ரிசார்ட்ஸ் இந்தியா லிமிடெட் (MHRIL) ஏற்கனவே ஊட்டி மற்றும் கொடைக்கானலில் ரிசார்ட்களை இயக்குகிறது. MHRIL இந்த குறிப்பிடத்தக்க முதலீட்டின் மூலம் தமிழ்நாட்டில் அதன் தடத்தை இரட்டிப்பாக்கும். இந்த முதலீடுகள் மூலம் MHRIL 2030 ஆம் ஆண்டிற்குள் அதன் ரூம் எண்ணிக்கைகளை 5,000 லிருந்து 10,000 ஆக உயர்த்த உள்ளது. இது MHRIL நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டங்களின் ஒரு பகுதியாகும்” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசுடன் MHRIL நிறுவனம் ஆனது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் MHRIL நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அனைத்து புதிய ரிசார்ட்டுகளும் நிகர பூஜ்ஜிய ஆற்றல், நீர் மற்றும் கழிவுகளின் சாம்பியன்களாக இருக்க இலக்கு வைத்துள்ளது. MHRIL நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அனைத்து புதிய ரிசார்ட்டுகளும் செயல்பாட்டில் முன்மாதிரியாக மாறும். இந்த முதலீடுகள் மூலம் நேரடியாக 1,500 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி, தமிழ் மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கு பங்களிக்கும்.
இந்த MHRIL நிறுவனத்தின் நிலைத்தன்மை ஆனது 2040க்குள் தமிழகத்தில் உருவாக்கப்பட்ட அனைத்து புதிய ரிசார்ட்டுகளும் நிகர பூஜ்ஜிய ஆற்றல், நீர் மற்றும் கழிவுகள் ஆகியவற்றில் கார்பன் நியூட்ராலிட்டியை அடை வதற்கான இலக்கை மற்றும் சாம்பியன்களாக இருக்கும் இலக்கை கொண்டுள்ளது. தமிழ் மாநிலத்தில் ஆராயப்படாத இடங்களில் உத்தே சிக்கப்பட்ட ரிசார்ட் திட்டங்கள் வரும். தமிழகத்தில் தனது கால்தடத்தை இரட்டிப்பாக்கி மாநிலத்தில் நிலையான சுற்றுலாவிற்கு வழிவகுக்கும்.
Latest Slideshows
- விவோ நிறுவனம் இன்று புதிய Vivo X200 Pro ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது
- Tamilnadu Alert App - தமிழக அரசின் Mobile App அறிமுகம்
- Bank Of Maharashtra Recruitment : மகாராஷ்டிரா வங்கியில் 600 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
- Nobel Prize For Literature 2024 : எழுத்தாளர் ஹான் காங்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது
- IND Vs NZ Test Series : நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா துணை கேப்டனாக அறிவிப்பு
- Interesting Facts About Bison : காட்டெருமை பற்றிய சுவாரசியமான தகவல்கள்
- 5 Types Of Land In India : இந்தியாவில் காணப்படும் நிலங்களின் வகைகள்
- Vettaiyan Box Office Day 1 : வேட்டையன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல்
- Vettaiyan Review : வேட்டையன் திரைப்படத்தின் திரை விமர்சனம்
- Vitamin C Foods In Tamil : வைட்டமின் சி நிறைந்த சத்தான உணவுகள்