EPIC Bagged Order in Saudi Arabia : EPIC சவூதி அரேபியாவில் ₹3,000 கோடி ஆர்டரைப் பெற்றுள்ளது
முன்பு Welspun Gujarat Stahl Rohren Limited என அறியப்பட்ட Welspun Corp Ltd (WCL) ஆனது இந்தியாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் ஒன்றான Welspun குழுமத்தின் ஒரு முதன்மை நிறுவனம் ஆகும். Welspun Corp Ltd (WCL) நிறுவனம் ஆனது பல்வேறு பயன்பாடுகளுக்கு பெரிய விட்டம் கொண்ட வெல்டட் லைன் பைப்புகள், டக்டைல் இரும்பு குழாய்கள் மற்றும் துருப்பிடிக்காத எஃகு குழாய்கள் உள்ளிட்ட நல்ல குழாய் தீர்வுகளை வழங்கும் ஒரு முழுமையான குழாய் தீர்வு நிறுவனமாகும். Welspun Corp Ltd (WCL) ஆறு கண்டங்கள் மற்றும் 50 நாடுகளில் உலகளாவிய தனது தடத்தை நிறுவியுள்ளது.
இந்தியாவில் WCL ஆனது 12,55,000 MTPA மொத்த லைன் பைப் உற்பத்தித் திறன் கொண்டது. WCL அமெரிக்காவில் 5,25,000 MTPA மொத்த லைன் பைப் உற்பத்தித் திறன் மற்றும் சவுதி அரேபியாவில் 3,75,000 MTPA மொத்த லைன் பைப் உற்பத்தித் திறன் கொண்டது. Welspun Corp Ltd (WCL) நிறுவனம் அஞ்சார் (குஜராத்), போபால் (மத்தியப் பிரதேசம்), மாண்டியா (கர்நாடகா) மற்றும் ஜகாடியா (குஜராத்) ஆகிய இடங்களில் நவனீ உற்பத்தி வசதிகளைக் கொண்டுள்ளது. புதிய பிரிவுகளுக்குள் நுழைவதன் மூலமும், முக்கிய வணிகங்களை அமைப்பதன் மூலமும், WCL சந்தைத் தலைமையைப் பராமரித்து மேலும் வளர்ச்சி வாய்ப்புகளைப் பெறுகிறது.
East Pipes Integrated Company for Industry (EPIC) மூலம் சவூதி அரேபியாவில் Rs.3,000 கோடி ஆர்டரைப் பெற்றுள்ளது
தற்போது Welspun Corp சவூதி அரேபியாவில் உள்ள தனது இணை நிறுவனமான East Pipes Integrated Company for Industry (EPIC) மூலம் சவூதி அரேபியாவில் Rs.3,000 கோடி ( EPIC bagged order in Saudi Arabia) ஆர்டரைப் பெற்றுள்ளது. East Pipes Integrated Company for Industry (EPIC) ஆனது சவுதி அராம்கோவுடன் பெரிய விட்டம் கொண்ட எஃகு குழாய்களை தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது. இந்த புதிய ஆர்டர் மூலம் Rs. 2,200 கோடி மதிப்பிலான உப்பு நீர் மாற்றக் கழகத்துக்கு இரும்புக் குழாய்கள் வழங்கப்பட உள்ளன. இந்த ₹3,000 கோடி ஒப்பந்தத்தின் நிதி தாக்கம் ஆனது 2024 – 2025 நிதியாண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாம் காலாண்டில் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த Welspun Corp Ltd (WCL) நிறுவனம் BIS-சான்றளிக்கப்பட்ட ஸ்டீல் பில்லெட்டுகள், TMT ரீபார்ஸ், டக்டைல் அயர்ன் (DI) குழாய்கள், துருப்பிடிக்காத ஸ்டீல் பைப்புகள் மற்றும் டியூப்ஸ்& பார்கள் ஆகியவற்றையும் தயாரிக்கிறது.
Latest Slideshows
- விவோ நிறுவனம் இன்று புதிய Vivo X200 Pro ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது
- Tamilnadu Alert App - தமிழக அரசின் Mobile App அறிமுகம்
- Bank Of Maharashtra Recruitment : மகாராஷ்டிரா வங்கியில் 600 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
- Nobel Prize For Literature 2024 : எழுத்தாளர் ஹான் காங்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது
- IND Vs NZ Test Series : நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா துணை கேப்டனாக அறிவிப்பு
- Interesting Facts About Bison : காட்டெருமை பற்றிய சுவாரசியமான தகவல்கள்
- 5 Types Of Land In India : இந்தியாவில் காணப்படும் நிலங்களின் வகைகள்
- Vettaiyan Box Office Day 1 : வேட்டையன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல்
- Vettaiyan Review : வேட்டையன் திரைப்படத்தின் திரை விமர்சனம்
- Vitamin C Foods In Tamil : வைட்டமின் சி நிறைந்த சத்தான உணவுகள்