PNB Recruitment 2024 : பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை வாய்ப்பு

இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் (Punjab National Bank) மேனேஜர் மற்றும் ஆபிசர் பணியிடங்களுக்கான (PNB Recruitment 2024) அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1025 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. மேலும் இந்த பதவிகளுக்கு (PNB Recruitment 2024) தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்.

PNB Recruitment 2024 (Officer - Credit) :

  1. காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : பஞ்சாப் நேஷனல் வங்கியில் Officer-Credit பணியிடங்களுக்கு மொத்தம் 1000 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  2. கல்வித் தகுதி (Educational Qualification) : இந்த Officer-Credit பணியிடங்களுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Chartered Accountant (CA/ MBA or Post Graduate Diploma In Management) படித்திருக்க வேண்டும்.

  3. வயதுத் தகுதி (Age) : இந்த Officer-Credit பணியிடங்களுக்கு 01.01.2024 அன்று வரை 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மற்றும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  4. சம்பளம் (Salary) : இந்த Officer-Credit பதவிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.36,000 – ரூ.63,840 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PNB Recruitment 2024 (Manager - Forex) :

  1. காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : பஞ்சாப் நேஷனல் வங்கியில் Manager-Forex பணியிடங்களுக்கு மொத்தம் 15 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  2. கல்வித் தகுதி (Educational Qualification) : இந்த Manager-Forex பணியிடங்களுக்கு (PNB Recruitment 2024) அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBA or Post Graduate Diploma In Management முடித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

  3. வயதுத் தகுதி (Age) : இந்த Manager-Forex பணியிடங்களுக்கு 01.01.2024 அன்று வரை 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  4. சம்பளம் (Salary) : பஞ்சாப் நேஷனல் வங்கியில் Manager-Forex பதவிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.48,170 – ரூ.69,810 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PNB Recruitment 2024 (Manager - Cyber Security) :

  1. காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : பஞ்சாப் நேஷனல் வங்கியில் Manager-Cyber Security பணியிடங்களுக்கு (PNB Recruitment 2024) மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  2. கல்வித் தகுதி (Educational Qualification) : இந்த Manager-Cyber Security பதவிக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட  பல்கலைக்கழகத்தில் B.E./ B.Tech In Computer Science/ Information Technology/  Electronics And Communications Engineering or M.C.A. படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

  3. வயதுத் தகுதி (Age) : இந்த Manager-Cyber Security பதவிக்கு 01.01.2024 அன்று வரை 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  4. சம்பளம் (Salary) : இந்த Manager-Cyber Security பதவிக்கு  தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.48,170 – ரூ.69,810 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  5. தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : இந்த மூன்று பணியிடங்களுக்கும் (PNB Recruitment 2024) ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் தேர்வில் திறனறிதல் (Reasoning) – 25 வினாக்கள் மற்றும் கணிதம் (Quantitative Aptitude) – 50 வினாக்கள் மற்றும் ஆங்கிலம் (English Language) – 25 வினாக்கள், சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் – 50 வினாக்கள் என மொத்தம் 150 வினாக்கள் கேட்கப்படும். மொத்தமாக 200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். தேர்விற்கான கால அளவானது 2 மணி நேரம் ஆகும். வினாக்கள் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் இருக்கும்.

  6. விண்ணப்பிக்கும் முறை (Application Process) : இந்த மூன்று பதவிகளுக்கும் https://ibpsonline.ibps.in/pnbmmjan24/ என்ற இணையதள பக்கத்தில் ஆன்லைனில்  விண்ணப்பிக்க வேண்டும்.

  7. விண்ணப்பக் கட்டணம் (Application Fees) : SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.50 ஆகவும் மற்ற பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1000 ஆகவும்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  8. விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date) : இந்த மூன்று பதவிகளுக்கும் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 25.02.2024 ஆகும்.

  9. மேலும் விவரங்களுக்கு : https://www.pnbindia.in/Recruitments.aspx அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

Latest Slideshows

Leave a Reply