Sale Deed - Platform Tamil

Sale Deed - விற்பனை பத்திரத்தை பற்றிய குறிப்புகள்

ரியல் எஸ்டேட் துறையில் சொத்து வியாபாரிகள் மற்றும் ரியல் எஸ்டேட் ஏஜென்ட்ஸ் (Real Estate Agents) இடையில்  விற்பனைப் பத்திரம் (Sale Deed) ஆனது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு விற்பனைப் பத்திரம் (Sale Deed) ஆனது சொத்தின் தலைப்பை ஒரு தரப்பினரிடமிருந்து மற்றொரு தரப்பினருக்கு மாற்ற பயன்படுத்தப்படுகின்றது. எந்த ஒரு சொத்தின் உரிமைக்கும் இந்த Sale Deed ஆனது ஒரு குறிப்பிடத்தக்க சட்ட பூர்வமான ஆவணம் ஆகும். சட்டப்பூர்வமாக ஒரு சொத்தை வாங்க மற்றும் விற்பனை செய்ய கையகப்படுத்த, அந்த சொத்தை வாங்குபவரும் மற்றும் அந்த சொத்தை விற்பவரும் ஒரு விற்பனைப் பத்திரத்தில் (Sale Deed) முறையாக கையொப்பமிட்டிருக்க வேண்டும்.

சொத்து தொடர்பான அனைத்து பாக்கிகள் மற்றும் கட்டணங்களை சொத்து விற்பனையாளர் செலுத்திவிட்டதை கையொப்பமிடுவதற்கு முன் உறுதி செய்ய வேண்டும். இரு தரப்பினரும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்கி திருப்தியடைந்த பின்னரே விற்பனைப் பத்திரம் ஆனது கையொப்பமிடப்படும். இரு தரப்பினரும் சாட்சிகள் முன்னிலையில் கையெழுத்திட வேண்டும். அவர்கள் முறையாக கையொப்பமிடாத வரையில் ஒரு சொத்தை கையகப்படுத்துதல் அல்லது விற்பது சட்டப்பூர்வமாக முடிக்கப்படாது. ஒரு சொத்தை விற்பவரும் மற்றும் வாங்குபவரும் முறையாக Sale Deed பத்திரத்தில் கையொப்பமிட்டு பதிவு செய்த பிறகு, சொத்தின் தலைப்பு சொத்தை விற்பவரிடமிருந்து, சொத்தை வாங்குபவருக்கு மாற்றப்படும்.

ஒரு விற்பனைப் பத்திரத்தில் (Sale Deed) இடம் பெறும் விவரங்கள் :

  • சொத்து வாங்குபவரின் பெயர்.
  • சொத்து விற்பனையாளரின் பெயர்.
  • விற்கப்படும் சொத்தின் தன்மை.
  • சொத்தை அடையாளம் காண உதவும் அடையாளங்கள்.
  • வழங்கப்படும் விலை.
  • வாங்குவதற்கு செலுத்தப்பட்ட தொகை.
  • முத்திரை வரி விகிதம்.
  • பதிவுக் கட்டணமாக வாங்குபவர் செலுத்திய தொகை.
  • இரு தரப்பினரிடையே ஒப்பந்தம் செய்யப்பட்ட தேதி.
  • யாரிடம் இருந்து எவ்வளவு பணம் பெறப்பட்டுள்ளது.
  • சொத்து வாங்குவது அல்லது விற்பது தொடர்பான அனைத்து தரப்பினரின் பெயர்கள் மற்றும் முகவரிகள்.

போன்ற விவரங்கள் இடம் பெற்றிக்க வேண்டும். பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரின் தேதி, பெயர், வயது மற்றும் முகவரி போன்ற விவரங்கள் அதில் இருக்க வேண்டும். இந்த விற்பனைப் பத்திரத்தில் (Sale Deed) உள்ள அவர்களின் கையொப்பங்களிலிருந்து இந்தத் தகவல்களின் உண்மையை எளிதாக சரிபார்த்து உறுதி செய்ய முடியும். நீதித்துறை அல்லாத முத்திரைத் தாளில் பத்திரம் உருவாக்கப்பட்டும் இந்த Sale Deed பத்திரம் ஆனது நிலம், குடியிருப்பு, கட்டிடம், வணிகச் சொத்து, பண்ணை வீடு அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் உட்பட எல்லா வகையான சொத்துக்களையும் விற்க பயன்படுத்தப்படலாம்.

விற்பனை பத்திரத்தின் (Sale Deed) முக்கியத்துவம் மற்றும் நன்மைகள் :

  1. சொத்து உரிமையின் சட்டப்பூர்வ ஆதாரத்தை வழங்குகிறது.
  2. சொத்து உரிமை தகராறுகளை தடுக்கிறது.
  3. சொத்தை வாங்குபவருக்கு பாதுகாப்பு அளிக்கிறது.

இந்த விற்பனைப் பத்திரம் (Sale Deed) ஆனது கடன்கள், அடமானங்கள் போன்றவற்றைப் பெற உதவுகிறது.

Latest Slideshows

Leave a Reply