மறைந்து வரும் மிருகநாயம் மற்றும் மிருகநேயம் | Santhanam pets a tiger in viral video

இயறக்கையோடு இசைந்து வாழும் வாழ்வே சிறந்தது. மனிதன் தனது எல்லைகளை உணர்ந்து செயல் படுவது மிகவும் அவசியம். வரைமுறைகளை மீறும் போது  தலை முறைகளும் மாறும். சமீப காலத்தில் நடிகர் சந்தானம்  ட்விட்டரில் வெளியிட்ட “இதுக்கு பெயர் தான் புலி வாலை பிடிப்பதா?” என்ற செய்தி ஒரு மிக பெரிய வெறுப்பு அலையை மக்களிடையே ஏற்படுத்தியது.  “இதுக்கு பெயர் தான் வீரமா”  மற்றும்  “முதலில் இந்த விடியோவை நீக்குங்கள்”  என பல தரப்பட்ட வெறுப்பு விமர்சனங்கள்,  கருத்துக்களை மக்கள் பதித்து உள்ளனர்.

ஒரு  சிறிய அசைவு கூட இல்லாமல் மற்றும் திறனில்லாதாது போல் ஒய்வாக சாய்ந்து இருக்கும் ஒரு வீர மிக்க மிருகத்தின் வாலை பிடித்து நடிகர் சந்தானம் பேசுவது போல வெளியான வீடியோ காட்சி மக்களிடையே பல தரப்பட்ட வெறுப்பு விமர்சனங்கள்,  கருத்துக்களை  ஏற்படுத்தி உள்ளது. மேலும் அதே வீடியோவில் ஒருவர் ஒரு குச்சியால் அந்த புலியின் தலையை லேசாக தட்டி தூண்டுவது பார்ப்பவர்களுக்கு இது ஒரு வகையான மிருகவதை மற்றும் மிருகதுன்புறுத்தல் என்ற வெறுப்பை ஏற்படுத்தி  உள்ளது. 

சங்க காலத்தில் பெண்கள் பாய்ந்து வரும் புலியை தங்களது கையில் இருக்கும் முற்றத்தால் நேருக்கு நேராக நின்று அடித்து விரட்டினார்கள் என்று சங்க இலக்கியங்கள் போற்றுகின்றன.  அப்படி இருக்க, இப்படி புலி பின்னால் உட்க்கார்ந்து டயலாக் பேசும் காட்சி மக்களிடையே வருத்தத்தை அளிக்கிறது. மேலும் அந்த மிருகத்திற்கு மருந்துகள் அளித்து அசைவற்ற நிலையில் வைத்திருப்பது போல தெரிகிறது.

விலங்குகளை பாதிக்கும் மனிதனின் ஆளுமை

“புலி பசித்தாலும் புல்லை உண்ணாது” இது போல பலதரப்பட்ட  குணாதிசயங்களுடன் இறைவன் மாறுபட்ட பலவகையான உயிரினங்களை  உலகில் படைத்து இருக்கிறான். மனிதன் காடுகளை அழித்து நாடுகள் ஆக்குகிறான். மிருகங்கள் மற்றும் விலங்குகள் வாழ்விடத்தையும் மற்றும் வாழ்வாதாரத்தையும் அழித்து நாசம் செய்கிறான்.  பொருள் ஈட்டும் நோக்கோடு சித்திரவதைகளை செய்து ஆளுமை செய்கிறான். மொத்தத்தில் மனிதனிடம் இருக்கும் மிருகநாயம் மற்றும் மிருகநேயம் மறைந்து வருகிறது.  இந்த நிலை மாறி மனிதன் இயறக்கையோடு இசைந்து வாழும் வாழ்வை வாழவேண்டும்.

Leave a Reply

Latest Slideshows