Society Laws for Pets in India: சட்டப்படி வளர்க்கக் கூடாத செல்ல பிராணிகள்

பொதுவாக செல்ல பிராணிகளை வளர்ப்பது என்பது நம் நாட்டில் உள்ள அவரவர் தனிப்பட்ட உரிமைகளாகவும், விருப்பங்களாகவும் இருந்தாலும் அவற்றை வளர்ப்பதற்கு சில சட்டங்களும் உண்டு. குறிப்பிட்ட சில விலங்குளையும், பறவைகளையும் மட்டுமே வளர்க்க வேண்டும். அப்படி வளர்க்கப்படும் விலங்குகளை வீட்டு விலங்குகள் என்றும் அழைக்கின்றனர். பெரும்பான்மையான மக்கள் அதிக அளவில் செல்ல பிராணிகளை வளர்ப்பதில் ஆர்வம் கொண்டுள்ளனர்.

சிறு பிள்ளைகளை கவனிப்பதை போன்றே அந்த பிராணிகளையும் கவனித்து கொள்வார்கள். நாய், பூனை, தங்க மீன்கள், லவ் பர்ட்ஸ், போன்றவைகளை அதிகமாகவே வளர்ப்பார்கள். குறிப்பிட்ட சிலரே பாம்பு, ஆமை, தேனீக்கள், யானை போன்ற உயிரினங்களை வளர்ப்பார்கள். அவரவர் ரசனையை பொறுத்தே அவர்களுக்கு பிடித்த செல்ல பிராணிகளை வருகின்றனர்.

காட்டு விலங்குகளான சிங்கம், புலி, சிறுத்தை, காண்டமிருகம் போன்ற விலங்குகளை யாரும் வளர்ப்பதில்லை. அவற்றை வளர்பதுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் வேட்டை நாய்களை வளர்க்க முயற்சி செய்து சிலர் இறந்துள்ளனர். இதனால் டெல்லி உள்ளிட்ட சில வட மாநிலங்களில் குறிப்பிட்ட வகையை சேர்ந்த நாய்களை வளர்க்க தடை விதிக்க பட்டுள்ளன. இதன் வரிசையில் கிளிகளை வளர்க்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கிளிகளின் இனம் இன்று அழிந்து வரும் நிலையில் உள்ளதால் அவற்றை வளர்க்கவும், கிளிகளை வைத்து ஜோசியம் பார்க்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய சட்டப்பிரிவுகள் மனிதர்களை காப்பது மட்டுமின்றி வனங்கள், காடுகள், மரங்கள், செடிகள், பாறைகள், மலைகள், விலங்குகள், பறவைகள் போன்ற எல்லாவற்றிற்கும் பாதுகாப்பு வழங்குகிறது. இதற்கான வன உயிரின பாதுகாப்புச்சட்டம் 1972-ல்  இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் இந்தியாவில் வாழும் உயிரினங்களை பட்டியலிட்டுள்ளனர். இந்த பட்டியலின் அடிப்படையில்தான் அந்த உயிரினங்களின் பாதுகாப்பு நிலை அமைந்துள்ளது.

அழிவை நோக்கி நகரும் உயிரினங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள  மிக அரிதாக காணப்படும் இந்த உயிரினங்களுக்கு அதிகப்படியான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உள்ள உயிரினங்களை அழிப்பதும், வேட்டையாடுவதும் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். அந்தமான் டீல்,அஸ்ஸாம் பாம்பு பார்ட்ரிட்ஜ், பசாஸ் போன்ற பறவைகள்(Schedule-1) முதல் அட்டவணையில் முக்கியமானவை.இவைகளை வீட்டில்  வளர்த்தால் நிச்சயம் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

இதேபோல் உளறுவாய் குருவிகள், கூக்குருவான், கடற்புறா, சின்னான், செண்டு வாத்து, கொக்கு, நாரை, குயில், கிளி, ஆந்தை, மீன்கொத்தி  மைனா போன்ற (Schedule-4) அட்டவணை நான்கில் உள்ள பறவைகளையும் வளர்கக் கூடாது. அப்படி வளர்த்தால் கட்டாயம் சிறை தண்டனையும் அபராதமும் உண்டு. முக்கியமாக அலெக்ஸாண்ட்ரிக் பாராகீட், செந்தார்ப் பைங்கிளி, ரெட் முனியா மற்றும் ஜங்கிள் மைனா போன்ற பறவை இனங்கள் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப் படுகின்றன.

ஆப்ரிக்க சாம்பல் கிளி, மஞ்சள் முகடு காஃடு மற்றும் நீல தொண்டை மக்கா போன்றவைகளும் இதில் அடங்கும். மேற்கூறிய இவை அனைத்தும் அழிந்து வரும் காட்டு விலங்குகளின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான மாநாட்டின் கீழ் சர்வதேச வணிக வர்த்தகத்தில் இருந்து பாதுகாக்கப்படுகின்றன.

Leave a Reply

Latest Slideshows