Space Tourism - Platform Tamil

Space Tourism : SERA மற்றும் Blue Origin விண்வெளிப் பயணத்திட்டத்தில் இந்தியா இணைந்தது

SERA மற்றும் Blue Origin விண்வெளிப் பயணத்திட்டத்தில் இந்தியாவும் ஒரு கூட்டாளி நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி ஆய்வு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான SERA மற்றும் Blue Origin நிறுவனம் மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்ப திட்டமிட்டுள்ளது. அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் Space Tourism என்ற ஒன்றை 2000 ஆண்டில் அறிமுகப்படுத்தினார். ஜெப் பெசோஸ் இதைத் தொடர்ந்து மக்களை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்ப Blue Origin NS-25 என்ற விண்கலத்தை உருவாக்கினார்.

அந்த திட்டத்தின்படி NS-22 என்ற ஒரு விண்கலத்தில் கடந்த 2022 ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப முயன்ற சமயத்தில் அதில் ஒரு பிரச்சனை வந்தது. மக்களை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சி தடைப்பட்டது. அதனால் மக்களை தவிர்த்து, வெறும் பொருட்கள் ஆனது  விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. அதன் பிறகு ஜெப் பெசோஸ் தற்போது Blue Origin NS-25 என்ற விண்கலத்தை உருவாக்கி, மக்களை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்ப திட்டமிட்டுள்ளார். பல தீவிர விசாரணைக்கு பிறகு அமெரிக்க அரசாங்கம் தற்போது NS-25 விண்கலத்தில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப அனுமதித்து இருக்கிறது.

Space Tourism :

இந்த திட்டத்தின்படி பயணிகள் விண்வெளிக்கு 20 நிமிடங்களில் செல்லலாம். பூமியின் வளிமண்டலத்தை அடுத்து இருக்கும் கார்மென் எல்லையை பயணிகள் கடந்து ஒரு 100 கிலோமீட்டர் உயரத்தில் 4 நிமிடங்கள் வரை மிதக்கும் ஒரு அனுபவத்தை பெற முடியும். அந்த விண்கலம் 4 நிமிடங்கள் கழித்து பாராசூட் மூலம் (Space Tourism) தரையிறக்கப்படும். இந்த திட்டத்தின்படி ஏவக்கூடிய ராக்கெட்டும் மற்றும் பாராசூட் மூலம் திரும்பி வரும் விண்கலமும் மீண்டும் மறுபயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் என்கின்றனர்.

Blue Origin New Shepard விண்வெளி பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் ஆறு நபர்களில் இந்தியர்களும் அடங்குவர். விண்வெளி பயணம் செல்வதற்கு விரும்பும் பயணிகள் 2.50 டாலர் கட்டணத்தை செலுத்தி இந்த திட்டத்தில் முன்பதிவு செய்துக்கொள்ள வேண்டும். இதில் பயணம் செல்ல பயணிகள் பொது வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வு பெற்ற பயணிகள் விண்வெளி செல்வதற்கான உடல் தேர்வு தகுதிக்கு உட்படுத்தப்படுவர்.

Latest Slideshows

Leave a Reply