Sunil Narine Century : சுனில் நரைன் அதிரடி சதம் | ராஜஸ்தான் பவுலர்களை கதறவிட்டார்

கொல்கத்தா :

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக கேகேஆர் அணியின் சுனில் நரைன் 49 பந்துகளில் சதம் (Sunil Narine Century) அடித்து அசத்தினார். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 31-வது லீக் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தாவின் ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருப்பதால் சேஸிங் இங்கு சிறப்பாக இருக்கும். இதன் காரணமாக முதலில் பேட் செய்த கேகேஆர் வீரர்கள் பெரிய இலக்கை எட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஃபில் சால்ட் 13 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

Sunil Narine Century :

இதன் பின்னர் 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சுனில் நரைனும், ரகுவன்ஷியும் அபாரமாக விளையாடி ரன் சேர்த்தனர். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்தது. ரகுவன்ஷி 18 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் 11 ரன்களில் சாஹல் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபக்கம் சுனில் நரைன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதலில் 29 பந்துகளில் அரைசதம் அடித்த சுனில் நரைன் (Sunil Narine Century) தொடர்ந்து ராஜஸ்தான் பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தினார்.

ஒரு கட்டத்தில் சுனில் 49 பந்துகளில் சதம் அடித்தார். சுனில் நரைன் நான்கு ஓவர்கள் மீதமிருக்கும் நிலையில் 150 ரன்களுக்கு மேல் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு சிறந்த பந்து வீச்சாளரால் சுனில் நரைன் ஆட்டம் இழந்தார். அவர் 56 பந்துகளில் 109 ரன்கள் எடுத்தார். அதிரடி ஆட்டக்காரர் ஆண்ட்ரூ ரசல் 13 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 8 ரன்களும் எடுத்தனர், ஆனால் ரிங்கு சிங் மட்டும் 9 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 20 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் கேகேஆர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்களை பொறுத்தவரை ஆவேஷ் கான் மற்றும் குல்தீப் சென் ஆகியோர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாக பந்து வீசினர்.

Latest Slideshows

Leave a Reply