TN Govt Plans 4th Auto Cluster In Thoothukudi : 4வது Auto Cluster மற்றும் 2 EV தொழில் மையங்கள்

TN Govt Plans 4th Auto Cluster In Thoothukudi :

தூத்துக்குடியில் வியட்நாமின் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட் ஆனது புதிய EV (Electric Vehicle) உற்பத்தி ஆலையை கட்டி வருகிறது. வின்ஃபாஸ்ட் ஆனது 5 ஆண்டுகளில் ₹4000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த EV யூனிட் ஆண்டுக்கு 1,50,000 யூனிட்கள் வரை உற்பத்தி திறன் கொண்டதாக இருக்கும். தென் தமிழக தூத்துக்குடியில் வின்ஃபாஸ்டின் EV உற்பத்தித் திட்டம் மற்றும் எதிர்கால ஆட்டோமொபைல் முதலீடுகளுக்கு ஆதரவாக புதிதாக ஒரு ஆட்டோ கிளஸ்டரை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது வாகனத் துறையில் சென்னையின் மிகப்பெரிய Auto Cluster, கோயம்புத்தூர் Auto Cluster மற்றும் ஓசூர்  Auto Cluster ஆகிய இடங்களில் கவனம் செலுத்தி வரும் தமிழக அரசாங்கம் தற்போது 4வது Auto Cluster குழுவை (TN Govt Plans 4th Auto Cluster In Thoothukudi)  அமைக்க திட்டமிட்டுள்ளது.

FameTN மூத்த ஆலோசகர் – எலக்ட்ரிக் வாகனத் துறை திரு.சீனிவாசன், “ஏற்கனவே ஆட்டோமொபைல் துறையின் முக்கிய மையமாக சென்னை உள்ளது. நாங்கள் கோவை மற்றும் ஓசூரிலும் கவனம் செலுத்தி வருகிறோம். இப்போது நான்காவது கிளஸ்டரை அரசு, VinFast வருவதால் மற்றும் பல தொழில்கள் தூத்துக்குடியில் முதலீடுகள் செய்து வருவதால், தூத்துக்குடியை மற்றொரு ஆட்டோ கிளஸ்டராக நாங்கள் உருவாக்கி வருகிறோம். நாங்கள் அடித்தளத்தில் இருந்து தொடங்குகிறோம். மேலும் இது எதிர்கால ஆட்டோமொபைல் முதலீடுகளுக்கு ஆதரவாக இருக்கும். EV பேட்டரி மற்றும் வாகன சோதனைக்கு மேலும் இரண்டு பொதுவான வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை அமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. மாநில அரசாங்கத்தின் EV பணிக்குழு ஆனது EV தொழில்துறையின் அனைத்து பங்குதாரர்களுடனும் கலந்துரையாடலைத் தொடங்கும் மற்றும் மோட்டார்கள், பேட்டரிகள் மற்றும் பவர் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றிற்கான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தும்” என்று கூறினார்.

தமிழ்நாடு அரசின் தொழில்துறை செயலாளர் வி.அருண் ராய் மாநிலத்தின் EV துறையில் அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்ய, இயக்க துறையில் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் பரந்த வளர்ச்சிக்காகவும் தீவிரமாக வகுத்து வருவதாக கூறினார்.

Latest Slideshows

Leave a Reply