Making iPhone Camera Modules In India : iPhone Camera Modules தயாரிக்க Titan, Murugappa-வுடன் பேச்சுவார்த்தை

முருகப்பா குழுமம் மற்றும் டைட்டன் நிறுவனத்துடன் iPhone Camera Modules தயாரிக்க ஆப்பிள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது :

  • கடந்த (2023-24) நிதியாண்டில் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் ஆனது தனது மொத்த ஐபோன்களில் 14% ஐபோன்களை தயாரித்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கும் ஐபோன்களின் மதிப்பு ரூ.1,16,521 கோடியாக உயர்ந்துள்ளதாக பிளூம்பெர்க் தகவல் தெரிவித்துள்ளது.
  • தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் பெரும்பான்மையான ஐபோன்களை சீனா தயாரித்து வருகின்றது. ஆப்பிள் நிறுவனம் இந்த பெரும்பான்மையான ஐபோன்கள் தயாரிப்பை சீனாவில் இருந்து வேறு நாடுகளுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவிற்கு தனது ஐபோன் தயாரிப்பு பணியை மாற்ற ஆப்பிள் நிறுவனம் (Making iPhone Camera Modules In India) முடிவு செய்துள்ளது.
  • இந்தியாவுக்கு ஆப்பிள் தனது விநியோகச் சங்கிலியில் குறைந்தபட்சம் பாதியை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் அடுத்த 3 ஆண்டுகளில் சப்ளையர்களிடமிருந்து உள்ளூர் மதிப்பு கூட்டலை கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகரிக்க விரும்புகிறது. ஸ்மார்ட்போன் கேமரா தொகுதிக்குள் இருக்கும் இமேஜ் சென்சார் சில்லுகள் ஆனது ஸ்மார்ட்போன் மற்றும் அதன் டிஸ்ப்ளேயின் மிகவும் விலையுயர்ந்த பகுதி (Part) ஆகும். இந்த இமேஜ் சென்சார்கள் ஆனது பிரத்யேக குறைக்கடத்திகள் ஆகும். ஆப்பிள் தனது இமேஜ் சென்சார் தேவைகளுக்கு பெரும்பாலும் ஜப்பானில் உள்ள சோனி, கொரியாவில் உள்ள சாம்சங் மற்றும் சீனாவில் உள்ள ஆம்னிவிஷன் ஆகியவற்றை சார்ந்துள்ளது.

Making iPhone Camera Modules In India - தமிழ்நாடுக்கு ஜாக்பாட் :

தற்போது இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய சவால்களில் (Making iPhone Camera Modules In India) ஒன்று தனது ஐபோன்களில் ஒருங்கிணைக்கப்பட்ட கேமரா தொகுதிகளுக்கான துணைக் கூறுகளை அசெம்பிள் செய்து தயாரித்து வழங்க இந்திய சப்ளையர்களின் கூட்டு இல்லை என்பதாகும். இந்த பிரச்சனையைத் தீர்க்கவே ஆப்பிள் நிறுவனம் முருகப்பா குழுமம் அல்லது டைட்டன் கம்பெனி ஆகியவற்றுடன் கூட்டணி அமைக்க ஆர்வமாக உள்ளது. அதனால் ஆப்பிள் டைட்டன் கம்பெனி மற்றும் முருகப்பா குழுமம் ஆகிய இவ்விரு நிறுவனங்களைத் ஐபோன்களில் ஒருங்கிணைக்கப்பட்ட கேமரா தொகுதிகளுக்கான துணைக் கூறுகளை அசெம்பிள் செய்து தயாரித்து வழங்க பேச்சுவார்த்தை நடத்தி தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது. ஆப்பிள் இவ்விரு நிறுவனங்களைத் தேர்வு செய்ய முக்கிய காரணம்.

  • கடிகாரங்கள் மற்றும் நகைகள் போன்ற துல்லியமான உதிரி பாகங்களைத் தயாரிப்பதில் டைட்டன் கம்பெனியின் நிபுணத்துவம்.
  • பொறியியல், நிதி சேவைகள் மற்றும் வேதியியல் துறைகளில் 100 ஆண்டுகளுக்கும் மேலான தொழில் அனுபவம் கொண்டது முருகப்பா குழுமம்.

இந்த பேச்சுவார்த்தைகள் மூலம் ஐந்து முதல் ஆறு மாதங்களில் கூட்டணிக்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்படலாம் என ஆப்பிள் நிறுவனம் எதிர்பார்க்கிறது. இதுமட்டும் நடந்தால் தமிழ்நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கும் முருகப்பா குழுமம் நிறுவனத்திற்கும் மற்றும் ஓசூரில் தொழிற்சாலையை வைத்துக்கொண்டு இயங்கி வரும் டைட்டன் நிறுவனத்திற்கும் ஜாக்பாட் தான். இவை நல்ல உயர்வு பெறும். 

Latest Slideshows

Leave a Reply