Valli Oyil Kummi Dance Guru - Platform Tamil

Valli Oyil Kummi Dance Guru : வள்ளி ஒயில் கும்மி நடன கலைஞர் எம்.பத்ரப்பனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது

தமிழகத்தின் தொன்மை வாய்ந்த கலையான ‘வள்ளி ஒயில் கும்மி’ நடனத்தை வெளிப்படுத்திய ‘குரு’ எம்.பத்ரப்பனுக்கு (Valli Oyil Kummi Dance Guru) பத்மஸ்ரீ விருது ஆனது குடியரசு தினத்தன்று அறிவிக்கப்பட்டது. கோவை, மேட்டுப்பாளையம் தாசம்பாளையத்தை சேர்ந்த நடன ஆசிரியர் பத்ரப்பன் கிராமத் திருவிழாக்களில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக வள்ளி கும்மி எனும் கிராமிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அழிந்து வரும் வள்ளி கும்மி நாட்டுப்புற நடனக் கலையை இன்றைய தலைமுறை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வள்ளி கும்மி நாட்டுப்புற நடனக் கலைஞரான பத்ரப்பன் தனது 87 வயதில் பாடுபட்டு வருவதை ஊக்கப்படுத்தியும், ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு கற்றுத் தருவதையும், பாராட்டும் வகையில் இந்த பத்மஸ்ரீ விருது ஆனது வழங்கப்பட்டுள்ளது.

பத்ரப்பன் (Valli Oyil Kummi Dance Guru) மேட்டுப்பாளையம் அருகே தாசனூர் என்ற தாசம்பாளையத்தில் 1936 ஏப்ரல் 16 ஆம் நாள் மாரன்ன கவுடர், ரங்கம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். எட்டாம் வகுப்பு வரை படித்த பத்ரப்பன் பின்னர் கிராமிய கலைமீது கொண்ட ஆர்வத்தால் வள்ளி கும்மியாட்டம் நடத்தத் தொடங்கினார். பத்ரப்பனின் மனைவி மாதம்மாளும் மகன் நக்கீரனும் இறந்துவிட்டனர். பத்ரப்பன் தற்போது மகள் முத்தம்மாள் வீட்டில் வாழ்ந்து வருகிறார்.

Valli Oyil Kummi Dance Guru - நாட்டுப்புற நடனக் கலைஞர் பத்ரப்பன் பத்மஸ்ரீ விருது உரை :

தனக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்தது மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது. சிறு வயதில் இருந்தே எனக்கு கிராமிய கலைகள் மீது ஆர்வம் அதிகம். மத்திய அரசு கிராமிய கலைகளை ஊக்குவிக்க இதுபோன்ற விருதுகளை அறிவித்து அளித்து வருவது மிகுந்த பாராட்டுக்குரியது என்றார். மத்திய அரசு வழங்கிய, பத்மஸ்ரீ விருது கிராமிய கலைஞர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும் என பத்ரப்பன் (Valli Oyil Kummi Dance Guru) தெரிவித்தார். வள்ளி கும்மி நாட்டுப்புற நடனக் கலை ஆனது முருகன் மற்றும் வள்ளி அம்மாவின் கதைகளை சித்தரிக்கும் நடனம் மற்றும் பாடலின் கலவையாகும்.

இந்த வள்ளி-கும்மி கலை மூலம் உடலில் நரம்புகள் வலுப்பெற்று உடல் ஆரோக்கியத்துடன் வாழ முடியும், இந்த வள்ளி கும்மி நாட்டுப்புற நடனக் கலை வடிவம் மூலம் சமூகப் பிரச்சனைகளையும் எடுத்துக் கொள்வதாக கூறினார். தான் கடந்த 60 வருடங்களாக வள்ளி கும்மி நாட்டுப்புற நடனக் கலையை எந்த வித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் ஆர்வத்துடன் கற்றுக் கொடுத்து வருதாக கூறினார். 200-க்கும் மேற்பட்டோர் இதுவரை இவரிடம் இந்த நாட்டுப்புற நடனக் கலையை கற்றுச் சென்றுள்ளதாக கூறினார் (இவரிடம் இந்த நாட்டுப்புற நடனக் கலையை கற்றவர்கள் இன்று பல்வேறு இடங்களில் பயிற்சியளித்து வருகின்றனர்).

Latest Slideshows

Leave a Reply