எட்வார்ட் ஜோசப் டிவைட் - 90 Year Old Astronaut To Travel To Space

இப்போது மனிதர்கள் எல்லாம் விண்வெளிக்குச் சுற்றுலாச் செல்லத் திட்டமிட்டு வருகின்றனர். காடு, மலை, கடல் எனச் சுற்றுலா சென்றுகொண்டிருந்த மனிதர்களின் ஆசைகளும் மற்றும் கனவுகளும் விண்வெளி வரை விரிவடைந்து உள்ளது. மனிதர்கள் விண்வெளியை சுற்றுலாத் தளங்களாக்கத் தொடங்கியிருக்கின்றனர். ஆந்திராவைச் சேர்ந்த கோபிசந்த் தோட்டகுரா முதல் இந்திய விண்வெளிச் சுற்றுலாப் பயணி என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்.

90 Year Old Astronaut To Travel To Space - விண்வெளி வீரர் ஒருவர் 90 வயதில் தனது கனவை சாத்தியப்படுத்தியுள்ளார் :

மனிதர்களின் ஆசைகளுக்கும் கனவுகளுக்கும் எல்லையேயில்லை. அறிவியல் ஆய்வுகளுக்காக விண்வெளிக்குச் சென்ற மனிதர்கள், விண்வெளியைச் சுற்றுலாத் தளங்களாக்கத் தொடங்கியிருக்கின்றனர். எட்வார்ட் ஜோசப் டிவைட் 1961-ம் ஆண்டு நாசாவின் முதல் ஆப்ரோ விண்வெளி வீரராவார். நாசாவில் விண்வெளி வீராராக இருந்து ஓய்வு பெறும் வரையிலும் நிறைவேறாத அவரது விண்வெளிப் பயணத்திற்கான கனவு இந்த ‘புளூ ஆர்ஜின்’ விண்வெளிச் சுற்றுலாப் பயணம் மூலம் நிறைவேறி உள்ளது. ஆப்பிரிக்காவைச் சேர்ந்த எட்வார்ட் ஜோசப் டிவைட் தனது 90வது வயதில் விண்வெளிக்குச் செல்ல வேண்டும் (90 Year Old Astronaut To Travel To Space) என்ற தனது கனவை இந்த ‘புளூ ஆர்ஜின்’ விண்வெளிச் சுற்றுலாப் பயணம் மூலம் சாத்தியப்படுத்தியிருக்கிறார்.

'Mir' ஸ்பேஸ் ஸ்டேஷன் :

1986ல் சோவியத் யூனியன் (ரஷ்யா) ஆனது  விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்ள ‘Mir’ என்ற ஸ்பேஸ் ஸ்டேஷனை பூமியின் துணைச் சுற்றுப் பாதையில் அமைத்திருந்தது. இந்த ஸ்பேஸ் ஸ்டேஷன் 1986 முதல் 2001ம் ஆண்டு வரை செயல்பாட்டியில் இருந்தது. 1991ம் ஆண்டு சோவியத் யூனியன் உடைந்து ரஷ்யாவாக மாறிவிட, ரஷ்யா இந்த ‘Mir’ ஸ்பேஸ் ஸ்டேஷனைக் கைவிட திட்டமிட்டது. ரஷ்யா செயல்பாட்டில் இல்லாமல் இருக்கும் இந்த ‘Mir’ ஸ்பேஸ் ஸ்டேஷனை அரசு, தனியார் நிறுவனங்களுடன் இணைத்து சுற்றுலாத் தளமாக்கி லாபம் பார்க்கலாம் என்று முடிவு செய்து விண்வெளிச் சுற்றுலாத் திட்டங்களைக் கொண்டுவந்தது. இதைத் தொடர்ந்து 2001ம் ஆண்டு சோதனை முறையில் விண்வெளிச் சுற்றுலாப் பயணம் தொடங்கியது. முதல் விண்வெளிச் சுற்றுலாப் பயணியாக அமெரிக்கத் தொழிலதிபரான டென்னிஸ் டிட்டோ விண்வெளிக்குச் சென்று வந்தார். அதாவது பூமியிலிருந்து 60 கிலோமீட்டர் உயரத்தில் துணைச் சுற்றுப்பாதை வரை அமெரிக்கத் தொழிலதிபரான டென்னிஸ் டிட்டோ சென்று வந்தார். இதுதான் இந்த விணவெளிச் சுற்றுலாப் பயணம் ஆரம்பமான கதை.

இந்த விண்வெளிச் சுற்றுலாப் பயணம் என்பது பூமியிலிருந்து 60-100 கிலோ மீட்டர் உயரத்தில் பூமியின் சுற்று வட்டப்பாதை அல்லது துணைச் சுற்று வட்டப்பாதை வரை பயணிக்கும் சுற்றுலாப் பயணம் ஆகும். இந்த விண்வெளிச் சுற்றுலாப் பயணத்தில் சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து பூமி மற்றும் நட்சத்திரங்களைக் காணலாம். இனிவரும் காலங்களில் நிலா மற்றும் செவ்வாய் என கிரகங்களுக்குச் செல்லும் முழுமையான விண்வெளிச் சுற்றுலா பயணமாக மேம்படுத்துவதற்கான சோதனைகள் ஆனது நடைபெற்று வருகின்றன. இது பெரும் லாபமீட்டும் துறையாக எதிர்காலத்தில் வரும் என கருதி, பல தனியார் நிறுவனங்கள் அரசுடன் இணைந்து விண்வெளிச் சுற்றுலாப் பயணத்திற்கான நிறுவனங்களைத் தொடங்கின.

அதே நோக்கத்தில் 24 ஆண்டுகளுக்கு முன்பே உலகப் பணக்கார்களில் ஒருவரும், ‘அமேசான்’ நிறுவனத்தின் நிறுவனருமான ஜெஃப் பெசோஸ் 2000ம் ஆண்டில் ‘புளூ ஆர்ஜின்’ என்ற விண்வெளிச் சுற்றுலா நிறுவனத்தை  ஆரம்பித்தார். சோதனை முறையில் இந்த விண்வெளிச் சுற்றுலாப் பயணத்தை செயல்படுத்தி வந்த ‘புளூ ஆர்ஜின்’ நிறுவனம் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளரான ஆலன் ஷெப்பர்ட் பெயரில் ‘நியூ ஷெப்பர்ட்’ என்ற பிரத்தேக விண்வெளி சுற்றுலா ராக்கெட்டை வடிவமைத்துள்ளது. தற்போது மேம்படுத்தப்பட்ட நியூ ஷெப்பர்ட் NS-22 ராக்கெட் விண்வெளிச் சுற்றுலாவிற்குத் தயாராகி ஆறு பேர் கொண்ட குழுவுடன் நேற்று விண்ணை நோக்கிப் பறந்துள்ளது. நியூ ஷெப்பர்ட் NS-22 ராக்கெட் ஆனது பூமியிலிருந்து 62 கிலோ மீட்டர் உயரம் சென்று துணைச் சுற்றுப் பாதையிலிருந்து பூமியின் அகால வெளி, புவியீர்ப்பு விசை அற்ற நிலை, ராக்கெட் பயணம் ஆகியவற்றை அனுபவித்துவிட்டு மீண்டும் பூமிக்குத் திரும்பிவிடும்.

Latest Slideshows

Leave a Reply