Astronaut Sunitha William's 3rd Space Flight : 3-வது விண்வெளி பயணத்திற்கு தயாராகிறார்

3-வது விண்வெளி பயணத்திற்கு தயாராகும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் :

Boeing’s Starliner Spacecraft வரும் மே 6 ஆம் தேதி திங்கட்கிழமை இரவு 10.34 மணிக்கு ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இந்த Boeing’s Starliner Spacecraft புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் ஸ்பேஸ் ஃபோர்ஸ் ஸ்டேஷனில் உள்ள விண்வெளி ஏவுதள வளாகம்-41ல் இருந்து ஏவப்படும். விண்வெளி வீரர் புட்ச் வில்மோரும் மற்றும் சுனிதா வில்லியம்ஸ்ஸூம் யுனைடெட் லாஞ்ச் அலையன்ஸ் அட்லஸ் V (Five) ராக்கெட் உந்துகணை மூலம் போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏறிச் சென்று, சுற்றுப் பாதையில் செல்லும் ஆய்வகத்திற்கு செல்வார்கள் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரு வார காலம் தங்குவார்கள். மேலும் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். Boeing’s Starliner Spacecraft-ன் முதல் க்ரூ திட்டம் இதுவாகும் என்று நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Astronaut Sunitha William's 3rd Space Flight :

இந்த Boeing’s Starliner Spacecraft-ல் பைலட்டாக சுனிதா வில்லியம்ஸ் இடம் பெற உள்ளார் மற்றும் அதற்கான பயிற்சியும் பெற்று வருகிறார். சுனிதா வில்லியம்ஸ் ஒரு அமெரிக்க விண்வெளி வீராங்கனை மற்றும் ஒரு கப்பல்படை அதிகாரியும் ஆவார். இவர் தனது 3-வது விண்வெளி பயணத்திற்கு (Astronaut Sunitha William’s 3rd Space Flight) தயாராகி வருகிறார்.

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பிறப்பு மற்றும் படிப்பு :

இவர் செப்டம்பர் 19, 1965-ல் தீபிகா பாந்த்யா மற்றும் போனி பாந்த்யாவுக்கும் மகளாக யூக்ளிட், ஓஹாய்யோவில் பிறந்தார். இவரது தந்தை போனி பாந்த்யா குஜராத்தை பிறப்பிடமாக கொண்ட ஒரு இந்தியர் ஆவார். இவரது தாயார் தீபிகா பாந்த்யா சுலோவீனிய வம்சாவளியாவார். தற்போது இவர்கள் மசாசூசெட்ஸ் பால்மவுத்தில் வசிக்கிறார்கள். தீபக் பாந்த்யா ஒரு புகழ்பெற்ற யூரோஅனாடமிஸ்ட். வில்லியம்சீன் தந்தை வழி உறவுகள் தற்போது குஜராத்தில் வசித்து வருகிறார்கள். இவர் மசாசூசெட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று 1983 இல் தேர்ச்சி பெற்று அமெரிக்க கப்பற்படை அகாதமியில் அறிவியல் துறையில் இளங்கலைப் பட்டத்தை 1987 இல் பெற்றவர். மேலும் இவர் 1995 ஆம் ஆண்டு Florida Institute Of Technology-ல் Engineering Management-ல் Master’s Degree பெற்றவர். அதிக முறை விண்வெளியில் நடந்த பெண் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான சுனிதா, 321 நாட்கள் விண்ணில் கழித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply