UMANG Mobile App மூலம் 5 நிமிடத்தில் PF கணக்கில் இருந்து பணம் எடுக்கலாம்

மத்திய அரசு ஆனது UMANG என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது

Government மற்றும் Private Company-களில் வேலை செய்யும் ஒவ்வொரு நபருக்கும் PF Account கணக்கு என்பது நடைமுறையில் இருக்கும். மாதம்தோறும் வேலை செய்யும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை ஆனது PF Account கணக்கிற்கு சென்றுவிடும். அதாவது குறிப்பிட்ட தொகை ஆனது பிடித்தம் செய்யப்பட்டு பணம் நேராக ஊழியர்களின் PF Account கணக்கிற்கு சென்றுவிடும்.

அவ்வாறு PF Account கணக்கில் பிடித்தம் செய்யப்படும் பணத்தை ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு மொத்தமாக எடுத்துக்கொள்ளலாம் மற்றும் ஊழியர்களுக்கு தேவை இருப்பின் பணியின்போதும் எடுத்துக்கொள்ளலாம். மத்திய அரசு ஆனது UMANG என்ற மொபைல் செயலியை (UMANG Mobile App) PF Account சம்மந்தமான அனைத்து தேவைகளுக்காகவும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த UMANG என்ற மொபைல் செயலி மூலம் ஊழியர்கள் தங்கள் PF Account கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை தெரிந்துக்கொள்ளலாம். அதுமட்டுமன்றி ஊழியர்கள் இந்த UMANG என்ற மொபைல் செயலியை பயன்படுத்தி எளிதாக தங்கள் PF Account பணத்தை எடுத்துக்கொல்லலாம்.

PF Account பணத்தை UMANG Mobile App மூலம் சுலபமாக எடுக்கும் முறை

  • ஊழியர்கள் மத்திய அரசின் UMANG செயலியை முதலில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
  • அதன் பின்னர் ஊழியர்கள் EPFO என Search செய்ய வேண்டும்.
  • இப்போது ஊழியர்கள் EPFO இணையதளத்திற்கு சென்று Employee Centric என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • பின்னர் ஊழியர்கள் Raise Claim என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்போது ஊழியர்கள் தங்கள் UAN எண்ணை பதிவிட வேண்டும்.
  • இதைத் தொடர்ந்து ஊழியர்கள் மொபைல் எண்ணுக்கு OTP வரும்.
  • அந்த OTP எண்ணை ஊழியர்கள் பதிவிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.
  • அதன் பின்னர் ஊழியர்களுக்கு ஒரு நம்பர் கொடுக்கப்படும்.
  • அந்த எண்ணை வைத்து ஊழியர்கள் தங்களது Claim Status என்ன என்பதை UMANG Mobile App மூலம் தெரிந்து கொள்ளலாம்.
  • மேலும் டிஜிட்டல் KYC உள்ளிட்டவற்றையும் இந்த UMANG Mobile App மூலம் ஊழியர்கள் செய்து முடித்துவிடலாம்.

இவை அனைத்தையும் செய்து முடிக்க முழுமையாக 5 நிமிடங்கள் கூட ஆகாது.

Latest Slideshows

Leave a Reply