கோவை மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் Baralikadu Tourist Spot

Baralikadu Tourist Spot :

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து 66 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இயற்கையோடு பின்னி பிணைந்து இருக்கும் இடம் தான் பரளிக்காடு சுற்றுலாத் தலம் (Baralikadu Tourist Spot) ஆகும். மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பரளிக்காடு பூச்சிமரத்தூர் சுற்றுலா தளத்தில் அடர்ந்து வளர்ந்த மரங்கள், வளைந்து நெளிந்து ஓடும் ஆறு, எங்கும் பார்த்தாலும் பச்சைப் பசேல் என தெரியும் காட்சிகள் மற்றும் மிகவும் சுத்தமான காற்று என்று இயற்கை அம்சங்கள் நிரம்பிக் கிடக்கிறது. கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் காரமடை பகுதிகளை கடந்து வந்தால் இந்த இடத்தை எளிதாக அடைந்திடலாம்.

Baralikadu Tourist Spot - சனி, ஞாயிறு மட்டுமே அனுமதி :

 • வனத்துறையின் கட்டுப்பாட்டில் இந்த பரளிக்காடு சுற்றுலாத்தலத்திற்கு (Baralikadu Tourist Spot) வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. இங்கு செல்ல வனத்துறையினரிடம் அனுமதி பெற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பணம் செலுத்த வேண்டும்.
 • வார நாட்களில் 20 பேருக்கு மேற்பட்டவர்கள் சுற்றுலா வந்தால், சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது.
 • இந்த பகுதிகளுக்குச் செல்ல காலை 10 மணி முதல் மறு நாள் காலை 10 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
 • தங்கும் இடங்கள் வனத்துறையினரே அமைத்துக் கொடுத்துள்ளனர்.
 • இங்குள்ள 3 தங்கும் விடுதிகளில் தலா 4 பேர் என்ற கணக்கில் 12 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
 • பூச்சிமரத்தூர் சுற்றுலாவுக்கு நபர் ஒருவருக்கு ரூ.700 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
 • ஐந்து வயதுக்கு கீழுள்ள குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது.

உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி கொடுக்கும் Baralikadu Tourist Spot

 • அடர்த்தியான காடு, பில்லூர் ஆறு, சுத்தமான காற்று
 • மலை வாழ் மக்களின் உணவு மூன்று வேளைகளிலும் சுற்றுலாப்பயணிகளுக்கு கலி உருண்டை, நாட்டுக்கோழி குழம்பு, மீன் குழம்பு, சப்பாத்தி, மசியல், போன்ற இயற்கை உணவுகள் வழங்கப்படுகிறது
 • பில்லூர் ஆற்றில் பரிசல் பயணம் செய்தவாறே இயற்கை காட்சிகளை பார்த்து ரசிக்கலாம். இங்கு 30-க்கும் அதிகமான பரிசல்களில் இயக்கப்படுகின்றன. இதில் ஒன்றில் 4 பேர் வரை பயணிக்கலாம்
 • டிரெக்கிங் செல்லும் வசதி சில நாட்கள் தங்கி சுற்றுப்பார்க்க விரும்புபவர்களுக்கு உள்ளது
 • மகிழ்ச்சியாக விளையாட பெரிய ஆலமரத்தில் கட்டியுள்ள ஊஞ்சல்கள்
 • அதிகாலை ஆற்றில் நீராடல், காட்டிற்குள் நடைபயணம்
 • மூலிகை குளியல்

விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்

 • வனத்துறை அலுவலர்களிடம் முன்பதிவு அவசியம்.
 • வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் மற்றும் 2 தவணை தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும்.
 • கிருமிநாசினி கொண்டு வர வேண்டும்.
 • சுற்றுலா பயணிகள் வெப்ப நிலையைக் கண்டறிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
 • இங்கு மது அருந்தவும், புகைப்பிடிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.
 • பிளாஸ்டிக் கவர்களை எடுத்துச் செல்ல மற்றும் பயன்படுத்த அனுமதி கிடையாது.

விதிமுறைகளை கடைபிடிப்பவர்கள் மட்டுமே சுற்றுலா மையத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த சுற்றுலா முழுக்க முழுக்க வனத்துறையினரின் கண்காணிப்பு கீழ் நடப்பதால் குடும்பத்துடன் தைரியமாக செல்லலாம். பரளிக்காடு பூச்சிமரத்தூர் சுற்றுலா தலம் (Baralikadu Tourist Spot) பழங்குடியின மக்களுக்கு நிரந்தர வருமானம் ஏற்படுத்தி தரும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.

Latest Slideshows

Leave a Reply