ரூ.7,500 கோடி மதிப்புள்ள World's Largest Gemstone இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

World's Largest Gemstone :

இலங்கையில் தொடர்ந்து ரத்தின கற்கள் கிடைத்து வருகின்றன. நீல ரத்தினக் கற்கள் ஏற்றுமதியில் இலங்கை நாடு முன்னணியில் உள்ளது. இலங்கை அரசு  கடந்த 2023 ஆம் ஆண்டு மட்டும் 50 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள ரத்தினங்கள், பட்டை தீட்டிய வைரங்கள் மற்றும் நகைகளை ஏற்றுமதி செய்துள்ளது. இலங்கையின் ரத்தினாபுரா பகுதியில் இந்த ரத்தின கற்கள் அதிக அளவில் அகழ்ந்தெடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கையின் ரத்தினத் தலைநகரம் என்று இந்த ரத்தினபுரா பகுதி ஆனது கருதப்படுகிறது. தற்போது ரூ.7,500 கோடி இந்திய மதிப்புடைய 802 கிலோ எடை கொண்ட ரத்தினக் கல், இலங்கையில் (World’s Largest Gemstone) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது உலகிலேயே மிகப்பெரிய ரத்தினக் கல் ஆகும். 2021-ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட பெரிய நீல நிற ரத்தினக் கல்தான் அப்போது உலகின் மிகப்பெரிய ரத்தினக் கல்லாக அறிவிக்கப்பட்டது. 310 கிலோ எடை கொண்ட அந்த ரத்தின கல்லுக்கு  குயின் ஆஃப் ஆசியா என பெயரிடப்பட்டது.

உலகின் மிகப்பெரிய நட்சத்திர வடிவிலான ரத்தின கல்லும் அதற்கு முன்னதாக அங்குதான் கண்டெடுக்கப்பட்டது. 510 கிலோ எடை கொண்ட அந்த நட்சத்திர வடிவிலான ரத்தின கல்லுக்கு அதிர்ஷடக் கல் என பெயரிடப்பட்டது. தற்போது இலங்கையின் பதுளையில் மற்றொரு மிகப்பெரிய 802 கிலோ எடை கொண்ட ரத்தினக் கல் கிடைத்துள்ளது. இதன் சந்தை மதிப்பு ஆனது ரூ.7,500 கோடி ஆகும். இயற்கையான ஒளி ஊடுருவல் தன்மை உடைய நீல நிறம் கொண்ட படிகம் என இந்தக் கல் அழைக்கப்படுகிறது. இந்த உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீலக்கல் தொகுப்பு (World’s Largest Gemstone) ஆனது ஒரு ரத்தின வணிகர் வீட்டின் பின்புறம் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ரூ.745 கோடி நீலக்கல் வீட்டின் பின்புறம் தற்செயலாக கிடைத்தது :

ரத்தின வணிகர், ரத்தினங்கள் அதிகம் காணப்படும் ரத்தினபுரா பகுதியில் உள்ள தமது வீட்டின் பின்புறம் கிணறு தோண்டும்போது தொழிலாளர்கள் இந்தக் கல்லைக் (World’s Largest Gemstone) கண்டுபிடித்தனர் என்று கூறுகிறார். இந்தக் கண்டுபிடிப்பு குறித்து ரத்தின வணிகர், கிணறு தோண்டிக்கொண்டிருந்த நபர் ஏதோ ஒரு அரிய கல் இருப்பதாக எங்களிடம் கூறினார் என்று அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார். பாதுகாப்புக் காரணங்களுக்காக, ரத்தின வணிகர் தமது முழுப் பெயரையோ, துல்லியமான வசிப்பிடத்தையோ குறிப்பிடவில்லை.

Latest Slideshows

Leave a Reply