BEL Jobs 2024 : 517 காலிப்பணியிடங்கள் இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமும் நவரத்னா அந்தஸ்துள்ள நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் டிரெய்னி இன்ஜினியர் (Trainee Engineer) பணியிடங்கள் (BEL Jobs 2024) நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 51 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாடு அடங்கிய தெற்கு மண்டலத்தில் மட்டும் 131 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த டிரெய்னி இன்ஜினியர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BEL Jobs 2024 :

  1. காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : பெல் இந்தியா நிறுவனத்தில் டிரெய்னி இன்ஜினியர் (Trainee Engineer)  பணியிடங்களுக்கு 517 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

  2. கல்வித் தகுதி (Educational Qualification) : இந்த டிரெய்னி இன்ஜினியர் பணியிடங்களுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E/B.Tech/M.E/M.Tech In Engineering (Electronics / Electronics & Communication / Computer Science / Computer Science & Engineering / Electronics & Telecommunication / Telecommunication / Communication / Mechanical / Electrical / Electrical & Electronics / Information Science / Information Technology) படித்திருக்க வேண்டும்.

  3. வயதுத் தகுதி (Age) : இந்த டிரெய்னி இன்ஜினியர் பணியிடங்களுக்கு 01.02.2024 அன்று வரை 28 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் M.E/M.Tech முடித்தவர்கள் 30 வயது வரை உள்ளவர்கள் (BEL Jobs 2024) விண்ணப்பிக்கலாம். மேலும் மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  4. சம்பளம் (Salary) : இந்த டிரெய்னி இன்ஜினியர் பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படுபவர்களுக்கு முதல் வருடம் ரூ.30,000/- இரண்டாம் வருடம் ரூ.35,000/- மூன்றாம் வருடம் ரூ.40,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  5. தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : இந்த டிரெய்னி இன்ஜினியர் (Trainee Engineer) பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

  6. விண்ணப்பிக்கும் முறை (Application Process) : இந்த டிரெய்னி இன்ஜினியர் (Trainee Engineer) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் (BEL Jobs 2024) https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfWbNC9vtwJ_Y2-RXsz4Pqb83Mh-q3quYiG2TaXFsJL8cNxRQ/viewform?pli=1 என்ற இணையதளப் பக்கத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

  7. விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date) : இந்த டிரெய்னி இன்ஜினியர் (Trainee Engineer) பணியிடங்களுக்கு 13.03.2024 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.

  8. மேலும் விவரங்களுக்கு :
    https://bel-india.in/Documentviews.aspx?fileName=Final%20TE%20Web%20Advt%2028022024%20HLS%20and%20SCB-27-02-24.pdf
    என்ற அதிகாரப்பூர்வ  இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

Latest Slideshows

Leave a Reply