Crude Oil Imports : இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிப்பு ஏற்படும்

Crude Oil Imports Will Get Affected In India :

பாரசீக வளைகுடா பகுதியில் ஈரான் – இஸ்ரேல் மோதலால் பதட்டம் மிகவும் அதிகரித்துள்ள சூழலில், கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஆனது ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்கு கச்சா எண்ணெய்யை இறக்குமதி (Crude Oil Imports) செய்ய கூடுதல் செலவு செய்ய வேண்டி வரும் எனவும் கருதப்படுகிறது. இதனால் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிப்பு ஏற்படும்.

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்தால் இந்தியா பாதிக்கப்படும் :

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவிகிதத்தை இறக்குமதி (Crude Oil Imports) செய்கிறது. ஆகவே உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்தால் இந்தியாவுக்கு மிகவும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இஸ்ரேல் ஆனது சிரியா நாட்டில் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் ஈரான் ராணுவ அதிகாரிகள் உயிரிழப்பு  ஏற்பட்டதை தொடர்ந்து பதட்டம் அதிகரித்தது மற்றும் கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்து உள்ளது. பிராண்ட் குரூட் விலை இந்த சம்பவத்துக்கு முன்பு ஒரு பீப்பாய் 85 டாலர் என்ற சராசரி விலையில் இருந்து வந்தது. சமீபத்தில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பொதுவாக இறக்குமதி செய்யும் பிரண்ட் குரூட் விலை ஒரு பீப்பாய்க்கு 90 டாலரை  எட்டி உள்ளது. கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 100 டாலரை எட்டும் அபாயம் உள்ளது.

இந்தியன் எரிபொருள் நிறுவனங்களுக்கு கூடுதல் சுமையை உண்டாக்கும் :

  • இந்தியாவில் சென்ற மாதம் 14 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் ஆனது குறைக்கப்பட்டது. ஆனால், பதட்ட சூழல் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை படிப்படியாக அதிகரித்து வருவதால், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஆனது ஏற்படும் என கருதப்படுகிறது.
  • இஸ்ரேல் ஆனது ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் விமானங்கள் மூலமாக நடத்தியுள்ள தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க தனது நடவடிக்கை எடுக்கும் என கருதப்படுகிறது. இதனால் மோதல் மேலும் அதிகரித்து கச்சா எண்ணெய் அதிகம் உற்பத்தி செய்யப்படும் பாரசீக வளைகுடா பகுதியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் உள்ளது எனவும் கருதப்படுகிறது.
  • இவற்றால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் (Crude Oil Imports) அபாயம் உள்ளது. ஆகவே கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆனது இந்தியன் எரிபொருள் நிறுவனங்களுக்கு கூடுதல் சுமையை உண்டாக்கும்.

Latest Slideshows

Leave a Reply