Facts About Elephants: யானைகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

நிலத்தில் வாழக்கூடிய விலங்குகளில் மிகப் பெரிய விலங்கு யானை. அதிலும் ஆப்ரிக்க புதர்யானை என்பது 13 அடிவரை வளரக்கூடியது. ஒவ்வொரு யானையும் 11 அரை டன் அளவிற்கு இருக்கும். ஆப்பிரிக்காவில் இரண்டு வகையான யானைகள் இருக்கிறது. 1. ஆப்ரிக்க புதர் யானை 2. ஆப்ரிக்க காட்டு யானை மற்றொன்று ஆசிய யானை இந்த மூன்று யானைகளில் ஆப்ரிக்க காட்டுயானைதான் சிறியது 7அடி அல்லது 8 அடியில் வளரக்கூடியது.

ஆசிய யானைகள் 10 அடியில் வளரக்கூடியது. இதன் எடை 7 டன் அளவு வரையில் இருக்கும். இந்த யானைகளை தவிர்த்து ஆசியாவில் இருக்கக்கூடிய நாடுகளில் உள்ள யானைகளையும் இலங்கை, இந்தோனேஷியா என்று நாடுகளை வைத்து வகைப்படுத்தியுள்ளனர். இந்த யானைகள் ஒவ்வொன்றிற்கும் அதை சார்ந்த குணாதிசயங்கள் இருக்கிறது.

ஒரு பெண் யானையின் பிரசவக்காலம் என்பது 2 வருடம்.24 மாதங்கள் வரை நீளும். பிறந்த குட்டி யானையின் அளவு 120 கிலோ எனடயில் இருக்கும். இதுவே ஆப்ரிக்க யானையாக இருந்தால் 165 கிலோவில் பிறக்கும். அதே சமயம் ஒரு குட்டி யானை பிறந்த உடனே 20 நிமிடங்களில் எழுந்து நிறக்க ஆரம்பித்து விடும். அதுவே இரண்டு நாட்களில் தன் கூட்டத்துடன் சேர்ந்து பல கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்து செல்லும் அளவிற்கு வலிமை வந்துவிடும். இப்படி ஒரு உடல் தன்மையை யானை இயற்கையாகவே பெற்றிருக்கிறது.

யானை பெயர் காரணம்:

தமிழில் யானை என்று எப்படி பெயர்வந்தது என்றால். தமிழில் யானம் என்ற ஒரு வார்த்தைக்கு மரக்கலம் (படகு) என்று பொருள். யானையை மேலிருந்து பார்ப்பதற்கு அது கடலில் மிதக்கும் பெரிய படகு போன்று தெரியும் இதை குறிக்கும் விதத்தில்தான் யானம் என்பதிலிருந்து யானை மருவி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.  ஆங்கிலத்தில் யானையை எலிபன்ட் (Elephant) என்று அழைக்கப்படுகிறது. இந்த வார்த்தை யானையின் தந்தத்தை குறிக்கக் கூடிய ஐவரி என்னும் கிரேக்க வார்த்தையில் இருந்து மருவி வந்துள்ளது.

யானையின் இளமை மரபுச்சொல் யானைக்கன்று யானை குட்டி என்று அழைக்கக்கூடாது. ஆண் யானை, பெண் யானை என்று யானைக்கு வகைப்படுத்தப்பட்ட பெயர்கள் பழந்தமிழில் 60 கும் மேற்பட்டு இருக்கிறது. வாரணம், தும்பி, கைம்மா, உம்பர்  போன்ற நிறைய பெயர்கள் தமிழில் வழங்கப்பட்டுள்ளது.

உணவு மற்றும் அதன் உடலமைப்பு:

யானைகள் ஒரு நாளைக்கு 15 மணி நேரம் சாப்பிட்டுக்கொண்டே இருக்கும். அதற்காக ஒருநாளைக்கு 15 கிலோமீட்டர் தூரம் வரை நடந்தே செல்லும்.ஒரு நாளுக்கு ஒரு யானை 200 கிலோ உணவை சாப்பிடும். 150 லிட்டர் தண்ணீரை குடிக்கும் இப்படி தொடர்ந்து காட்டில் வெயிலில் நடந்து கொண்டே இருப்பதால் அதன் உடம்பில் அதிகப்படியான வெயில் படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அந்த வெயிலில் இருந்து தன்னை எப்படி பாதுகாத்து கொள்கிறது என்றால் தன்னுடைய தோலை வைத்து தப்பித்து கொள்கிறது.

யானையின் வெளிப்புற தோல் என்பது 2 அரை சென்டிமீட்டர் அளவிற்கு கடினமாக இருக்கும். அந்த கடினமான தோலில் நிறைய மடிப்புகள் இருக்கும். இந்த மடிப்புகளில் நிறைய மழைநீர் தேங்கியிருந்து அந்த நீரின் மூலமாக யானை தன்னை குளிர்ச்சியடைய வைத்து கொள்ளும்.

மழை பொழியும் சமயத்தில் நீர்நிலைகளில் இருக்கும் நீரை தனது தும்பிக்கையால் எடுத்து தன் உடம்பில் தெளித்துக்கொண்டு வெயிலில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ளும். யானை தும்பிக்கையின் மூலம் 8 முதல் 15 லிட்டர் வரை நீரை உரிந்து தன் உடலில் தெளித்து கொள்ளும்.

நீர்நிலைகளை பார்த்தால் யானைகளுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டு நீரில் விளையாடும் இதுவே யானைகளின் பொழுது போக்கு. விளையாடுவது மட்டுமில்லாமல் நீச்சலும் அடிக்கும். நீருக்கடியில் தன் உடலை சுமந்து கொண்டு தன் கால்களைப் பயன்படுத்தி யானையால் பல கிலோமீட்டர் தூரம்வரை நீச்சலடிக்க முடியும். இவ்வளவு பிரம்மாண்டமான யானையின் பாதம் மென்மையாக இருக்கும். 

இந்த பாதங்கள் மேன்மையாக இருப்பதால்தான் யானைகளால் சத்தமின்றி நடக்க முடிகிறது. அதே போன்று இந்த பாதங்களின் அமைப்புகளால்தான் எப்படிப்பட்ட நில அமைப்பிலும் யானைகளால் நடக்க முடிகிறது. இதனால் யானைகளால் எளிதில் இடறி விழ முடியாது. இந்த பாதங்களின் மூலமாகவும் யானைகள் ஒன்றுக்கொன்று தொடர்புகொள்ளும். ஏதேனும் ஆபத்து இருக்கிறது என்று தெரிந்தால் அதிர்வுகளை ஏற்படுத்தி அந்த அதிர்வுகளை தன்னுடைய பாதங்கள் மூலமாக யானைகள் உணர்வதற்காகத்தான் இப்படி ஒரு அமைப்பை இயற்கை கொடுத்து இருக்கிறது.

தும்பிக்கை:

யானை என்று சொன்னதும் நம் கண்களுக்கு முதலில் தெரிவது யானையின் தும்பிக்கைதான். தும்பிக்கைதான் யானையின் முக்கியமான அடையாளம். யானையின் தும்பிக்கைகளில் 40,000 திற்கும் மேற்பட்ட தசைகள் இருக்கிறது. தும்பிக்கை இல்லாமல் யானைகளால் வாழ முடியாது. தும்பிக்கை என்பது அதற்கு ஒரு கை மாதிரி செயல்படுகிறது. மூச்சு விடுவதற்கான மூச்சு குழலாக இல்லாமல் உணவு பொருட்களை நுகர்வதற்கு, ஒருவருக்கொருவரை தொடர்பு கொள்ளவும் தன்னுடைய தும்பிக்கையை யானை பயன்படுத்துகிறது.

பொருட்களை தூங்குவதற்கு, மரங்களை தள்ளிவிட்டு பாதை அமைப்பதற்கு போன்றவைகளுக்கும் யானைகள் தும்பிக்கையை பயன்படுத்துகிறது. தும்பிக்கைகள் எந்த அளவிற்கு பயன்படுகிறது என்றால் வேர்க்கடலையை உடைத்து அந்த வேர்க்கடலையை மட்டும் சாப்பிட்டுவிட்டு தோலை தூக்கி போடும் அளவிற்கு யானையின் தும்பிக்கைகள் இணக்கமாக இருக்கிறது.

தந்தம் மற்றும் வயது:

தும்பிக்கைக்கு அடுத்து யானைகளுக்கு அழகு சேர்ப்பது யானைகளின் தந்தம். யானைகளின் தந்தம் என்பது யானைகளின் பற்கள் ஆகும். நமக்கு இருப்பதை போலவே யானைகளுக்கும் பற்கள் நீண்டு வளருவதை தான் தந்தம் என்று சொல்கிறோம். அந்த தந்தத்தில் நிறைய கலை பொருட்களை செய்து வணிகத்திற்காக யானைகள் வேட்டையாடப் படுகிறது.

யானைகள் மனிதர்களை அடுத்து இறப்பிற்கு அதிகம் மரியாதை செலுத்தும் ஒரு விலங்காக இருக்கிறது. தன்னுடைய கூட்டத்தில் இருக்கும் ஒரு யானை இறந்து விட்டால் அந்த யானைக்காக நீண்ட நேரம் துக்கம் அனுசரித்து அதற்கு இறுதி மரியாதை செலுத்திவிட்டுத்தான் செல்லும். இது மட்டுமின்றி காட்டில் வேறேதும் விலங்கு இறந்துவிட்டால் அதை யானை கூட்டம் கண்டால் யானைகள் கூடி நின்று இறுதி மரியாதை செலுத்தி விட்டுதான் அந்த இடத்தை விட்டு செல்லும். இப்படி இறப்பிற்கு மரியாதை செலுத்த கூடியதுதான் யானை.

காட்டில் இருக்கும் யானைகள் 60 முதல் 70 வயது வரை வாழும். பிடிபட்ட யானையாக இருந்தால் அது 80 வயதுவரை வாழ்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

யானைகள் மிகச்சிறந்த தொடர்பாளர்கள்

யானைகள் ஒன்றுக்கொன்று சாதாரணமாகவே தொடர்புக்கொள்ளும். அவை பிளிறுவது மட்டுமின்றி பல வகையான சின்ன சின்ன ஒலிகளை எழுப்பி அதன் மூலமாக ஒன்றையொன்று கருத்துக்களை பரிமாறிக் கொள்கிறது. இது மட்டுமின்றி தொடுதல் மூலமாகவும் கம்யூனிகேட் செய்து கொள்கிறது. யானைகள் நீண்ட நாட்களுக்கு பின் மற்றொரு யானையை சந்திக்கும்போது கைகளை குலுக்குவது போல தன்னுடைய தும்பிக்கையினால் குலுக்கிக்கொள்ளும். அதை பயன்படுத்தி ஆரத்தழுவிக்கொள்ளும். மனிதர்களைப்போல் யானைகளும் தன் அன்பை வெளிப்படுத்தும். 

யானைகளின் நினைவுத்திறன்:

யானைகளுக்கு உண்மையிலே நியாபக சக்தி மிக அதிகம். எந்த அளவுக்கு அதற்கு நியாப சக்தி இருக்கிறது என்றால் ஒவ்வொரு உணவும் எங்கு இருக்கிறது, அதற்கு போகும் வழிகள் எங்கு இருக்கு, போகும் வழியில் என்னென்ன ஆபத்துகள் இருக்கிறது, அந்த ஆபத்தின் போது என்னென்ன செய்ய வேண்டும். அதிலிருந்து எப்படி தப்பிக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு விஷயத்தையுமே எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் யானைகளால் கூர்மையாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும். இதை நினைவில் வைப்பது மட்டுமின்றி தன்னுடைய அடித்த தலைமுறைக்களுக்கும் அவைகளால் கடத்த முடியும்.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் மனிதர்களின் வடிவத்தையும், குரலையும் துல்லியமாக யானைகள் நினைவில் வைத்து கொள்ளும். எவ்வளவு வருடங்கள் ஆனாலும் அவற்றை யானைகள் மறப்பதில்லை. இது போன்ற குணாதிசயங்கள் மனிதர்கள் மற்றும் ஒரு சில குரங்கு வகைகளை அடுத்து யானைகளிடம் தான் அதிகம் இருக்கிறது என்று யானைகளை வைத்து ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

யானைகளின் போர்ப்படை:

யானைகள் பற்றிய பதிவுகள் சங்க பாடல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. யானைகளை வீரத்தின் அடையாளமாக தமிழர்கள் கொண்டாடினார்கள். யானைகளை வைத்து ஒரு தனி படை பலத்தையே உருவாக்கி இருந்தார்கள் நம் தமிழர்கள். யானைப் படைகளைக் கொண்ட அரசர்களின் வரலாறு என்பது மிகவும் அதிகமாக இருக்கிறது. போருக்கு மட்டுமின்றி விவசாயம் சார்ந்த பணிகளுக்கும் யானைகளை பயன்படுத்தினர். யானைகளை பழக்கப்படுத்தி போரில் பயன்படுத்தக்கூடிய யுக்தி என்பது அதிகமாக தென்னிந்தியாவில்தான் புழக்கத்தில் இருந்தது. இங்கிருந்துதான் பிறகு வட இந்தியாவில் பரவியது. அதுமட்டுமின்றி தென்னிந்தியாவில் இருந்துதான் பிற நாடுகளுக்கும் யானைகளை பழக்க படுத்தி கொண்டு சென்றனர். 

யானைகளின் முக்கியத்துவம்:

ஆதிகாலத்தில் இருந்தே மனிதர்கள் குகைகளில் வரைந்த ஓவியங்களில் யானைகள் அதிக இடத்தை பிடித்துள்ளது. அப்போதிருந்தே யானையை ஆச்சரியமாகதான் மனிதர்கள் பார்த்திருக்கிறார்கள். அன்று உருவாக்கிய மகாபலிபுரம் சிற்பக்கலையில் தொடங்கி இன்றுவரையில் பல கலைசார்ந்த ஓவியங்கள் வரை யானைகளை அடிப்படியாக வைத்து உருவாக்க கூடிய கலை வடிவம் என்பது கலைகள் மட்டுமின்றி பல மதங்களின் முக்கியமான அடையாளங்களில் யானைகளை வைத்து பார்க்கப்படுகிறது.

மதம் பிடித்தல்:

மதம் ஏன் யானைகளுக்கு பிடிக்கிறது.பொதுவாக ஆண்யானைகளுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்தில் அதனுடைய கண்ணுக்கும் காதுக்கும் இடைப்பட்ட சுரப்பிகளில் இருந்து மத நீர் என்பது ஒழுக ஆரம்பிக்கும். இந்த மத நீர் ஒழுகும் சமயத்தில் தான் யானைகளுக்கு மதம் பிடிக்கிறது. இந்த மதம் ஏன் பிடிக்குறது என்பதற்கான சரியான அறிவியல் பூர்வமான காரணம் இன்னும் கண்டுபிடிக்க வில்லை.

Latest Slideshows

Leave a Reply