Former RCB players are Amazing - Fans Review : முன்னாள் ஆர்.சி.பி வீரர்கள் அசத்தல் - ரசிகர்கள் விமர்சனம்..

பெங்களூரு :

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் திறமையான வீரர்கள் பலர் இருந்தும், விராட் கோலி போன்ற கேப்டன் கடந்த காலங்களில் இருந்தும், ஒரு முறை கூட அந்த அணியால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லையே என ரசிகர்கள் புலம்புவார்கள். rcb டீம் எடுத்த முட்டாள்தனமான முடிவுகளே காரணம் என்பது மீண்டும் உறுதியானது. சமூக வலைதளங்களில் யாராவது முட்டாள்தனமாக பேசினால், நீங்கள் ஜோக்கர் அல்ல. முழு சர்க்கஸும் நீங்கள் தான் என்று சொல்லும்.

அதற்கு சரியான அணி ஐபிஎல் தொடரில் ஆர்சிபி. கடந்த காலத்தில் RCB நிராகரிக்கப்பட்ட மூன்று வீரர்கள் இப்போது IPL 2024 தொடரில் வரிசையாக நிற்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இந்தப் பட்டியலில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் சிவம் துபே முதலிடம் பிடித்துள்ளார்.

சிவம் துபே :

சிவம் துபே ஆர்சிபி அணிக்காக விளையாடி வந்தார், தற்போது அந்த அணியில் இருந்து நீக்கப்பட்ட சிவம் துபே சிறப்பாக விளையாடி வருகிறார். இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஹென்ரிச் கிளாசன் உள்ளார். கிளாசன் தற்போது 8 போட்டிகளுக்குப் பிறகு ஆரஞ்சு தொப்பியை வென்றுள்ளார். கிளாசன் மற்றும் சிவம் துபே பெங்களூரு அணிக்காக ஆரம்பத்தில் விளையாடிய போது பெரிதாக ரன்கள் ஒன்றும் குவிக்கவில்லை.

இதனால் விரக்தியில் பெங்களூரு அணி இந்த இரண்டு வீரரையும் ஏலத்தில் விட்டது. இதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து அதற்கு இந்த வீரர்கள் பழிவாங்கியுள்ளனர். என்னவென்றால் தற்போது நடந்து வரும் தொடரில் சிறப்பாக விளையாடி வருபவர்கள் (Former RCB players are Amazing) இந்த வீரர்கள் தான். இதன் மூலம் பெங்களூரு அணி இவர்களை தக்க வைத்திருந்தால் இந்நேரம் கோப்பையை வென்று இருக்கலாம் என்று ரசிகர்கள் பலர் விமர்சித்து வருகின்றனர். இந்த முட்டாள்தனம் தான் பெங்களூர் அணி ஆண்டுதோறும் தோல்வி அடைந்து வருவதற்கு முக்கிய காரணம்

கிளாசன் :

குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹென்ரிச் கிளாசன் 34 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். இதில் 7 சிக்ஸர்கள் மற்றும் நான்கு பவுண்டரிகள் அடங்கும். முன்னதாக கேகேஆருக்கு எதிரான போட்டியிலும் கிளாசன் 29 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். இதில் 8 சிக்ஸர்கள் அடங்கும். கிளாசன் ஆர்சிபியின் தேர்வு வீரரும் ஆவார். அவரை சரியாக பயன்படுத்தாமல் அணியினர் வெளியேற்றியுள்ளனர்.

டிராவிஸ் ஹெட் :

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் தற்போது ஹைதராபாத் அணியில் இருக்கும் டிராவிஸ் ஹெட் உள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 24 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். இதில் ஒன்பது பவுண்டரிகளும் மூன்று சிக்ஸர்களும் அடங்கும். கடந்த ஒரு வருடமாக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் அனைத்திலும் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்த நிலையில் அவரும் ஆர்சிபி அணியில் இடம்பிடித்துள்ளார். ஆனால் RCB அணி அவரை சரியாக பயன்படுத்தாமல் நீக்கியது.

Latest Slideshows

Leave a Reply