Pathirana Returns : குட்டி மல்லிங்கா மதிஷா பத்திரனா ரிட்டர்ன்

சென்னை :

சிஎஸ்கே அணியின் இளம் நட்சத்திர வீரர் மதீஷா பத்திரனா (Pathirana Returns) காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து சென்னை வந்தடைந்தார். இந்த சீசனுக்கான முதல் போட்டி நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது. நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக அறிமுகமான முஷ்தாபிசுர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார். அதுமட்டுமின்றி பேட்டிங்கில் ரவீந்திரா, ரஹானே, மிட்செல், துபே, ஜடேஜா உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக பேட்டிங் செய்தனர். குறிப்பாக, கான்வே மற்றும் பத்திரனாவின் இடத்தை எத்தனை சிஎஸ்கே வீரர்கள் நிரப்பப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது. சிஎஸ்கே அணி ரச்சின் மற்றும் முஷ்தாபிசுர் ரஹ்மான் ஆகியோரை வைத்து எளிதாக சமாளித்தது.

Pathirana Returns :

கான்வே மீண்டும் கிரிக்கெட் மைதானத்திற்கு வர இன்னும் 6 வாரங்கள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சிஎஸ்கேயின் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பத்திரனாவும் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆட்டங்களின் முதல் பாதியை இழக்க நேரிடும் என்று கூறப்படுகிறது. ஆனால் பங்களாதேஷ் டி20 தொடரின் போது காயமடைந்த பத்திரனா உடனடியாக சிகிச்சைக்காக இலங்கை திரும்பினார். அவர் பந்துவீசுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானதால், பத்திரனாவுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் என்ஓசி சான்றிதழ் வழங்கவில்லை என்று கூறப்பட்டது.

காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்த பத்திரனா தற்போது விமானம் மூலம் சென்னை வந்துள்ளார். அவர் நாளை சிஎஸ்கே அணியுடன் பயிற்சியில் (Pathirana Returns) ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சீசனில், பத்திரனா சிஎஸ்கேயின் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் மற்றும் தோனியின் செல்லப்பிள்ளையாக உருவெடுத்தார். இதனால் இந்த சீசனில் பத்திரனா நேரடியாக சிஎஸ்கே விளையாடும் லெவனில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குஜராத் அணிக்கு எதிராக மார்ச் 26-ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே விளையாடும் ஆட்டத்தில் முஷ்தாபிசுர் ரஹ்மான் இருப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply