Game Changer Movie Jarakandi Song Release : கேம் சேஞ்சர் படத்தின் ஜரகண்டி பாடல் வெளியீடு
நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் கேம் செஞ்சர் படத்தின் ஜரகண்டி (Game Changer Movie Jarakandi Song Release) பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னணி தெலுங்கு நடிகர் ராம் சரணுக்கு தமிழில் கணிசமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவர் நடித்த மாவீரன், யெவடு போன்ற தெலுங்கு படங்கள் தமிழில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.
ராஜமெளலி இயக்கிய RRR படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார் ராம் சரண். இந்நிலையில் ராம் சரண் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், அவர் நடிக்கும் கேம் சேஞ்சர் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
கேம் சேஞ்சர் (Game Changer Movie Jarakandi Song Release)
கார்த்திக் சுப்புராஜின் கதையை மையமாக வைத்து ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கேம் சேஞ்சர். இப்படத்தில் ராம் சரண் மற்றும் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். தற்போது படத்தின் ஜரகண்டி என்ற முதல் பாடலை இயக்குனர் ஷங்கர் வெளியிட்டுள்ளார். ஜரகண்டி பாடலை அனந்த ஸ்ரீராம் எழுதியுள்ளார்.
இந்த பாடலை பஞ்சாபி பாடகர் தலேர் மெஹந்தி மற்றும் சுனிதி செளஹன் இணைந்து பாடியுள்ளனர். பிரபுதேவா பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். வழக்கம் போல் ஷங்கரின் பிரம்மாண்ட கற்பனையில் இந்தப் பாடல் உருவாகியுள்ளது. பிரமாண்டமான செட்கள், ஆடை வடிவமைப்பு மற்றும் ராம் சரண் கியாரா அத்வானியின் குத்தாட்டம் ஆகியவற்றை பார்ப்பதற்கு அந்நியன் திரைப்படத்தின் அண்டங்காக்கா கொண்டக்காரி பாடலை இந்த பாடல் நினைவூட்டுகிறது.
Latest Slideshows
-
Ind vs SA 1st Test : 93 ரன்னில் சுருண்ட இந்தியா.. சொந்த மண்ணில் படுதோல்வி!
-
VARANASI Official Teaser : ''வாரணாசி'' படம் வெளியானால் நிச்சயம் இது நடக்கும்..
-
IPL 2025 Retention List: CSK அணியில் வெளியேறிய வீரர்கள் யார் யார்?
-
Kaantha Movie Box Office : 2 நாட்களில் காந்தா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?
-
CSK Trade Players 2026 : CSK அணியில் இணைந்தார் சஞ்சு சாம்சன்!!!
-
Mudakathan Keerai Benefits In Tamil : முடக்கத்தான் கீரையின் அற்புதமான மருத்துவ பயன்கள்
-
Bank Of Baroda Recruitment 2025 : பேங்க் ஆப் பரோடா வங்கியில் 2700 காலிப்பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க..! -
Kumki 2 Release Ban : கும்கி 2 படம் வெளியிட இடைக்காலத் தடை?
-
TNPSC Annual Planner 2026 : டிஎன்பிஎஸ்சி 2026 ஆண்டு கால அட்டவணை எப்போது வெளியாகும் -
PNB Local Bank Officer : பஞ்சாப் நேஷனல் வங்கியில் 750 காலிப்பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க..!