Vijay Antony & Mirnalini Ravi 's Romeo Trailer : விஜய் ஆண்டனியின் "ரோமியோ" ட்ரெய்லர் வெளியீடு.!
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய விஜய் ஆண்டனி தற்போது ரோமியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இப்படத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பரத் தனசேகர் என்பவர் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜனவரி 30- ஆம் தேதி வெளியானது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் முதல் இரவு காட்சியில் விஜய் ஆண்டனி கையில் ஒரு சொம்பும் நடிகை மிருணாளினி ரவி கையில் மதுவும் வைத்திருந்த புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற போது நடிகர் விஜய் ஆண்டனி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து பதிலளித்த அவர் ரொம்ப நாளாகவே குடி பழக்கம் என்பது நம்ம ஊரில் இருக்கிறது. இதற்கு முன்பு திராட்சை ரசம் மற்றும் சாராயம் என்ற பெயரில் குடிச்சிட்டு இருந்தோம். ஆனால் தற்போது பார்களில் குடிக்கிறோம்.
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னாடியே ஜீசஸ் கூட குடிச்சிருக்கார் என கூறியிருந்தார். இதற்கு தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து அவர் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும் இல்லையெனில் அவர் வீட்டு முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுமெனவும் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
இது தொடர்பாக விளக்கமளித்த நடிகர் விஜய் ஆண்டனி நான் பேசியதை தவறாக இணைத்து அர்த்தப்படுத்தியதால் உங்களைப் போன்ற சிலர் மனம் புண்பட்டிருக்கிறீர்கள் என்பது எனக்கு வேதனை அளிக்கிறது. நான் தவறாக எதுவும் கூறவில்லை. நீங்களும் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். மக்களுக்காக ரத்தம் சிந்தி உயிர் நீத்த மதங்களுக்கு அப்பாற்பட்ட இயேசுவைப் பற்றி தவறாக சித்தரிக்க எனக்கு கனவிலும் வராது எனத் தெரிவித்தார்.
ரோமியோ’ ட்ரெய்லர் (Vijay Antony & Mirnalini Ravi 's Romeo Trailer)
இந்த நிலையில் ரோமியோ (Vijay Antony & Mirnalini Ravi ‘s Romeo Trailer) படத்தின் ட்ரெய்லர் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. “என் மனைவியை இனி ஒருதலையாக காதலிக்கப் போகிறேன்” என்ற டயலாக்குடன் ட்ரெய்லர் தொடக்கத்திலேயே நம்மை இழுத்துக் கொள்கிறது. திருமணத்துக்கு விருப்பமில்லாமல் சம்மதிக்கும் ஹீரோயின் மற்றும் மனைவியின் அன்பைப் பெற பலவழிகளில் போராடும் கணவன் என்ற கதைக்களத்துடன் தமிழில் ‘மௌன ராகம்’ படத்தில் தொடங்கி ‘ராஜா ராணி’ படம் வரை தமிழில் எண்ணற்ற படங்கள் வந்துவிட்டன. இதுவும் அதே பாணி கதைதான் என்பதை இந்த ட்ரெய்லரின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.
எனினும் ட்ரெய்லர் முழுவதும் வரும் நகைச்சுவையான வசனங்கள் கலகலப்பான காட்சிகள் மூலம் இது ஒரு ஜாலியான படமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்கின்றனர். ட்ரெய்லரில் ஆங்காங்கே விடிவி கணேஷ் அடிக்கும் ஒன்லைனர்களும் ரசிக்க வைக்கின்றன. ரோமியோ படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. தெலுங்கில் ‘லவ் குரு’ என்ற தலைப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Latest Slideshows
-
Kerala Matta Rice Benefits In Tamil : கேரள மட்டை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
-
Yezhu Kadal Yezhu Malai Trailer Released : ஏழு கடல் ஏழு மலை திரைப்பட ட்ரெய்லர் வெளியீடு
-
TikTok App Is Back : டிக்டாக் செயலி மீண்டும் செயலுக்கு வந்தது
-
Champions Trophy 2025 : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
-
Vikram Tamil Remake Of Margo : மார்கோ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் சியான் விக்ரம்
-
CLRI Recruitment 2025 : மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 41 காலிப்பணியிடங்கள் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
OnePlus 13 & 13R Phone Replacement : ஒன்பிளஸ் 13 & 13R போன்களுக்கு ரிப்ளேஸ்மெண்ட் திட்டம்
-
2024-25 GDP Growth Down : 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி குறையும் என கணிக்கப்பட்டுள்ளது
-
Pongal Festival 2025 : பொங்கல் பண்டிகையின் வரலாறும் & கொண்டாட்டமும்
-
Game Changer Review : கேம் சேஞ்சர் திரைப்படத்தின் திரை விமர்சனம்