Kamal Haasan's Sathya Remake : ரீமேக் ஆகும் கமல்ஹாசனின் சத்யா

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக உலக நாயகனாக வலம் வரும் கமல்ஹாசனின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்ற ‘சத்யா’ திரைப்படத்தை ரீமேக் (Kamal Haasan’s Sathya Remake) செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தை போர் தொழில் பட புகழ் விக்னேஷ் ராஜா இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த புத்தகம், தேச சேவையில் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒரு சிறந்த இந்தியரின் கனவு. இது எல்லா வகையிலும் ஒரு பார்வை, ஒரு உணர்ச்சிமிக்க கனவு; ஆனால் நன்கு முன்வைக்கப்பட்டு, வரிசைப்படுத்தப்பட்டு, விரிவான ஆராய்ச்சி, உண்மைகள் மற்றும் தரவுகளுடன் ஆதரிக்கப்படும் – மேலும் வளர்ந்த தேசத்தின் அந்தஸ்துக்கான தேடலில் நமது நாடு எதிர்கொள்ளும் பெரும்பாலான பிரச்சனைகள் மற்றும் சவால்களுக்கு நியாயம் செய்கிறது.

கமல்ஹாசனின் சத்யா :

கமல்ஹாசன் நடிப்பில் 1988ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சத்யா. இந்தப் படத்தில் கமலுக்கு ஜோடியாக அமலா நடித்திருந்தார். இவருடன் நாசர், ராஜேஷ் கிட்டி, ஜனகராஜ், வடிவுக்கரசி, நடராஜன், ஆர்.எஸ்.சிவாஜி, கவினர் வாலி, ஆர்.கணேஷ் என பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை ரஜினிகாந்த் நடித்த பாட்சா படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். சத்யா திரைப்படம்1985 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான அர்ஜுன் படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தில் சன்னி தியோல் மற்றும் டிம்பிள் கபாடியா நடித்திருந்தனர். இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தை தமிழில் கமலை வைத்து இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார்.

இப்படம் ஹிந்தியில் வசூலித்ததை விட தமிழில் அதிகம் வசூலித்தது, கமலின் திரையுலக வாழ்க்கையில் மறக்க முடியாத படங்களில் ஒன்றாக அமைந்தது. இந்த படத்தை கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. அநீதியைப் பொறுத்துக் கொள்ளாத சத்தியமூர்த்தி என்ற வேலையற்ற இளைஞனாக கமல் நடித்தார். மேலும், முகத்தில் லேசாக தாடி, முறுக்கு மீசை, வெட்டிய தலை முடி, கழுத்தில் கயிறு, கையில் வளையல் என ஒருவித தோற்றத்தை படத்தில் அறிமுகப்படுத்தினார் கமல்.

சத்யா ரீமேக் (Kamal Haasan's Sathya Remake)

இவ்வளவு பெரிய வசூலை ஈட்டிய சத்யா தற்போது ரீமேக் (Kamal Haasan’s Sathya Remake) ஆகிறது. இந்த படத்தை போர் தொழில் பட புகழ் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்க இருப்பதாகவும், கமல் வேடத்தில் அசோக் செல்வன் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக பயணத்தை தொடங்கிய அசோக் செல்வன், தெகிடி, சவாலே சமாளி, ஓ மை கடவுளே, ஹாஸ்டல், சில நேரங்களில் சில மனிதர்கள், போர் தொழில், ப்ளூ ஸ்டார் என நல்ல கதை அம்சங்கள் கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

Latest Slideshows

Leave a Reply