லோகேஷ்-ஸ்ருதி ரொமான்ஸ் : Inimel Teaser வெளியீடு

லோகேஷ் கனகராஜ் ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இனிமேல்’ ஆல்பம் பாடலின் டீசர் (Inimel Teaser) வெளியாகி இணையத்தில் வைரலான நிலையில், ரசிகர்களின் பேச்சு பொருளாக மாறியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மகாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்து ஹிட் கொடுத்தவர். அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171வது படத்தை இயக்கவுள்ளார். படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார். இதற்கிடையில், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் கடந்த மாதம் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதி ஹாசன் இணைந்திருக்கும் போஸ்டர் ஒன்றை வெளியிட்டது. அதில் ‘இனிமேல் டெலுலு இஸ் தி நியூ சொலுலு’ என்ற கேப்ஷன் குறிப்பிடப்பட்டிருந்தது. ரசிகர்கள் இதன் அர்த்தம் புரியாமல் இருந்தனர்.

ஸ்ருதிஹாசனை வைத்து லோகேஷ் கனகராஜ் படத்தை இயக்குகிறாரா என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால் ரசிகர்கள் ஒரு டிவிஸ்டில் இருந்தனர். இசையில் ஆர்வம் கொண்ட ஸ்ருதி ஹாசன் ஏற்கனவே எட்ஜ், ஷீ இஸ் எ ஹீரோ மற்றும் மான்ஸ்டர் மெஷின் போன்ற இண்டிபெண்டெண்ட் ஆல்பங்களை ஏற்கனவே வெளியிட்டுள்ளார். அந்த வரிசையில், லோகேஷ் கனகராஜை வைத்து ‘இனிமேல்’ என்ற ஒரு ஆல்பத்தை இயக்க உள்ளார் என்றும், அந்த பாடலுக்கான வரிகளை கமல்ஹாசன் எழுதியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. லோகேஷ் கனகராஜை இயக்குநராக மட்டுமே பார்த்த ரசிகர்கள் இப்போது அவரை ஹீரோவாக பார்க்கப் போவதுதான் மகிழ்ச்சிக்கான காரணம். இந்தப் பாடல் வரும் 25ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், ஸ்ருதிஹாசன், லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள ‘இனிமேல்’ ஆல்பத்தின் டீசர் (Inimel Teaser) நேற்று வெளியானது.

Inimel Teaser :

இந்த டீசர் வீடியோக்களில் லோகேஷ் செய்த ரொமான்ஸ் காட்சிகளை பார்த்து அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளனர். மேலும் சமூக வலைதளங்களில் லோகேஷ் மீது நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கிண்டல் செய்து வருகின்றனர். தன்னுடைய படங்களில் காதல் காட்சிகளை வைக்காத அவர் ஆல்பம் பாடலில் மட்டும் இப்படி கொஞ்சுவது நியாயமா என கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்த காயத்ரி அவரை கலாய்த்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply