How To Reduce Body Heat : உடல் சூட்டை குறைப்பதற்கான வழிமுறைகள்

கோடைக்காலத்தில் வெயில் சுட்டெரிக்கிறது. வீட்டிற்குள் கூட இருக்க முடியாத அளவுக்கு காற்று சூடாக இருக்கிறது. சிறிது நேரம் வெயிலில் போனாலே உடல் சூடாகி விடுகிறது. ஆனால் ஒருவரது உடல் வெப்பநிலை அதிகரிக்க பல காரணிகள் உள்ளன. காலநிலைக்கு கூடுதலாக, காப்ஃபைன், ஆல்கஹால் மற்றும் கார உணவுகள் போன்ற உணவுகள் உடல் வெப்பநிலையை அதிகரிக்கும்.

அதேபோல சில மருந்துகள் உடலில் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்கின்றன. ஒருவரின் உடல் வெப்பநிலையை சீராக்க பல இயற்கை வழிகள் உள்ளன. இந்தக் பகுதியில், உடல் வெப்பநிலையைக் குறைப்பதற்கும், அதை சீரான அளவில் பராமரிக்கவும் உதவும் சில வழிமுறைகள் (How To Reduce Body Heat) கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வழிகளை பின்பற்றி வந்தாலே, உடல் சூடு பிரச்சனையில் இருந்து உடனடியாக விடுபடலாம்.

How To Reduce Body Heat - உடல் சூட்டை குறைக்கும் வழிமுறைகள் :

  • குளிர்ந்த பால் : வெயில் காலத்தில் பச்சைப் பாலை ஃப்ரிட்ஜில் வைத்து தினமும் குடித்து வந்தால், உடலில் உள்ள அதிகப்படியான சூடு குறையும். உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்கள் இந்த முறையை தினமும் பின்பற்றி வந்தால் விரைவில் நல்ல மாற்றம் கிடைக்கும். முக்கியமாக பால் மிகவும் குளிராக இருக்கக்கூடாது. பச்சைப் பால் குடிக்கப் பிடிக்காதவர்கள், உங்களுக்குப் பிடித்தமான சுவைகளுடன் கலந்து, மில்க் ஷேக் போல் குடித்து வரலாம்.

  • தண்ணீர் : உடல் சூட்டை தணிக்க தண்ணீரை விட சிறந்த பானம் ஏதும் இல்லை. கோடையில் வழக்கமாக குடிக்கும் நீரின் அளவை விட சற்று அதிகமாக அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். குளிர்ந்த தண்ணீரை குடித்து வந்தால், உடலில் வெப்பம் குறையும்.

  • பீச் பழம் : உடல் அதிக வெப்பமாக இருக்கிறதா? இதன் விளைவாக உங்கள் தோலில் கடுமையாக அரிப்பு ஏற்படுகிறதா? பீச் பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி2 போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, அவை ஆரோக்கியமான சருமத்தையும் உடலையும் பராமரிக்க அவசியம். இதனால் உலர்ந்த பீச் பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டை (How To Reduce Body Heat) குறைக்கலாம்.

  • வைட்டமின் சி நிறைந்த பழங்கள் : கோடைக்காலத்தில் வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்களான சாத்துக்குடி, ஆரஞ்சு போன்றவற்றைச் சாப்பிட்டு வந்தால், உடல் வெப்பநிலை அதிகரிப்பதைத் தடுக்கலாம். எனவே வெயில் காலம் அல்லது கோடை காலத்தில் வைட்டமின் சி பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள். இதனால் உடல் சூடு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

  • பால் மற்றும் தேன் : வெயில் காலத்தில் உடல் வெப்பநிலையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஒரு நல்ல வழி, தேன் கலந்து குளிர்ந்த பாலை குடிப்பது தான். உங்களுக்கு உடல் வெப்பம் தாங்க முடியாத நிலையில், தினமும் ஒரு டம்ளர் குளிர்ந்த பாலில் 1 தேக்கரண்டி தேன் கலந்து குடிக்கவும். இத்தகைய பானத்தை குடிப்பதால், உடல் சூடு விரைவில் தணியும்.

  • வாழைப்பழம் : வாழைப்பழம் அனைத்து காலங்களிலும் குறைந்த விலையில் கிடைக்கும் பழமாகும். வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் எண்ணற்ற நன்மைகளை அளிக்கும். இந்தப் பழம் எந்த உணவையும் எளிதில் ஜீரணிக்கச் செய்கிறது. உணவுக்குப் பிறகு ஒரு வாழைப்பழதை சாப்பிட்டால், அது உணவுகளை எளிதில் ஜீரணமாக்கி, இதன் மூலம் உடல் சூடு அதிகரிப்பதை தடுக்கிறது.

  • கரும்பு ஜூஸ் : கரும்புச் சாற்றில் உள்ள சர்க்கரை உடலின் ஆற்றலை அதிகரிக்கிறது. கரும்பு குளிர்ச்சி தன்மையை  கொண்டுள்ளது. இது அதிகப்படியான உடல் வெப்பநிலையை குறைக்க உதவுகிறது. கோடையில் அதிக வெப்பம் ஏற்படாமல் இருக்க தினமும் ஒரு டம்ளர் கரும்பு சாறு குடிக்கவும். இதனால் உடல் சூட்டினால் அவதிப்படுவதை தவிர்க்கலாம்.

  • இளநீர் : உடல் சூடாக இருக்கும் போது நாம் அனைவருக்கும் விரும்பி குடிக்கத் தோன்றும் ஓர் பானம் இளநீர் ஆகும். இந்த நீர் ஒருவரது உடல் சூட்டை தணித்து உடல் வறண்டு போவதை தடுக்கிறது. மேலும் இதில் உள்ள சத்துக்கள் உடலின் ஆற்றலை மேம்படுத்துகிறது. எனவே கோடையில் தொடர்ந்து இளநீர் அருந்துவதை (How To Reduce Body Heat) வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

  • தர்பூசணி : தர்பூசணி உடல் சூட்டை குறைக்க உதவுகிறது. இதற்கு அதில் உள்ள நீர்சத்து தான் காரணமாகும். மேலும், கோடையில் தர்பூசணியை தவறாமல் சாப்பிட்டு வந்தால், அது நீரழிவைத் தடுத்து, உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். தர்பூசணியை சிறு துண்டுகளாக நறுக்கி அதில் சிறிது சர்க்கரை மற்றும் குளிர்ந்த பால் சேர்த்து குடிக்கவும். இல்லையெனில் சாலட் போன்றும் செய்தும் சாப்பிடலாம்.

  • கற்றாழை : உடல் சூட்டை உடனே குறைக்க வேண்டுமானால், கற்றாழை ஜெல்லை உடல் முழுவதும் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இல்லை என்றால் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை நன்றாக அரைத்துக் குடிக்கவும். குறிப்பாக, ஒரு நாளைக்கு 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல்லுக்கு மேல் உட்கொள்ள வேண்டாம்.

  • வெள்ளரிக்காய் : கோடை காலத்தில் அதிகம் விற்பனையாகும் காய்கறிகளில் வெள்ளரியும் ஒன்று. வெள்ளரி மிகவும் சுவையானதாகும். இவற்றில் அதிகம் நீர்ச்சத்து நிறைந்திருப்பதால், வெயில் காலத்தில் இதை சாப்பிட்டால் உடல் வறட்சி தடுக்கப்படும். எனவே இந்த வெள்ளரியை சாலட் போன்று செய்து அடிக்கடி சாப்பிடுங்கள். இவ்வாறு குளிர்ந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வதால் உடல் சூட்டில் இருந்து தம்மை (How To Reduce Body Heat) பாதுகாத்துக்கொள்ளலாம்.

Latest Slideshows

Leave a Reply