2024 இறுதிக்குள் Apple-ன் புதிய iPad Mini 2024 அறிமுகம்

Apple-ன் புதிய iPad Mini 2024 :

கடந்த 2021ம் ஆண்டு இறுதியில் ஆப்பிள் நிறுவனம் தங்களது 6th ஜெனரேஷன் ஐபேடு மினியை அறிமுகம் செய்தது. அதேபோல இப்போது 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் 7th ஜெனரேஷன் ஆப்பிள் ஐபேடு மினியை அறிமுகம் (iPad Mini 2024) செய்ய உள்ளது. இந்த மிகச்சிறிய டேப்லெட்டானது வேகமாக செயல்படும் திறன் கொண்ட சிப்செட்டுடன் வரும். கடந்த 2021 ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த 6th ஜெனரேஷன் ஐபேடு மினியின் ஸ்டோரேஜ் 256GB ஆகும். இந்த வேரியண்டின் அன்றைய விலை 64,900/- ஆகும். தற்போது அறிமுகப்படுத்த இருக்கும் இந்த 7th ஜெனரேஷன் ஆப்பிள் ஐபேடு மினி மிகச்சிறந்த டேப்லெட்டின் வேகம் மற்றும் செயல்திறன் கொண்டிருக்கும். இதில் பெரிய டிஸ்ப்ளே இடம் பெறும். இது நல்ல பவர்ஃபுல் சிப் செட்டுடன் வரும். அதாவது A16 சிப்செட் கொண்டிருக்கலாம்.

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் நடந்த Let Loose ஈவென்டில் தங்களது லேட்டஸ்ட் iPad Pro மற்றும் iPad Air ஆகிய இரண்டு சாதனங்களை வெளியிட்டது. iPad Air 10.9 inch மற்றும் 13 inch டிஸ்ப்ளே வகைகளில், மற்றும் லிக்விட் ரெட்டினா ஸ்கிரீன் உடன் வருகிறது. இவை அதிக திறன்மிக்க Octa Core M2 சிப்சட்டைக் கொண்டுள்ளன. இத்துடன் வெளியான iPad Pro, 11 இன்ச் மற்றும் 13 இன்ச் டிஸ்ப்ளேக்கில் கிடைக்கிறது. இந்த iPad Pro, 11 inch மாடல் 2TB ஸ்டோரேஜுடன் M4 சிப்புடன் வருகின்றது. ஆனால் அந்த Let Loose ஈவென்டில் ஐபேட் மினி குறித்த எந்த அப்டேட்டும் வெளியிடப்படவில்லை.

“இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் புதிய iPad Mini 2024-யை வெளியிடும். இந்த 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் இதை வெளியிடும். இது நல்ல பவர்ஃபுல் சிப் செட்டுடன் வரும். அதனால் மிகச்சிறந்த டேப்லெட்டின் வேகம் மற்றும் செயல்திறன் கொண்டிருக்கும் வகையில் இது இருக்கும். கடந்த 2021 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய முதல் ஐபேட் மினியில் எந்த புதிய அப்டேட்டும் இடம் பெறவில்லை. அதனால் இந்த ஆண்டு நிச்சயம் புதிய அப்டேட்டுகள் இடம் பெறும். மேலும் அதில் வேறு ஏதாவது புதுமை இருக்குமா என்பதை இதுவரை தெரியபடுத்தவில்லை” என  ப்ளூம்பெர்கின் பிரபல தொழில்நுட்ப ஆய்வாளரான மார்க் குர்மன் கூறியுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply