NASA's James Webb Telescope - Platform Tamil

NASA's James Webb Telescope : படம் பிடித்தது அமெரிக்க ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி...

NASA's James Webb Telescope :

அமெரிக்கா வாஷிங்டன் : விண்வெளி குறித்த ஆய்வுக்காக அனுப்பப்பட்ட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி (NASA’s James Webb Telescope) புதிதாக சூரியன் போலவே வேறு ஒரு நட்சத்திரம் பிறந்திருப்பதை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. அமெரிக்க விண்வெளி மையமான நாசா (NASA) ஐரோப்பிய மற்றும் கனடா ஆகிய விண்வெளி மையங்களுடன் இணைந்து 20 ஆண்டு காலம் கடின உழைப்புக்குப் பின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை உருவாக்கின. இந்த “ஜேம்ஸ்வெப்” தொலைநோக்கி (NASA’s James Webb Telescope) கடந்த 2021-ல் விண்ணில் ஏவப்பட்டது. அப்போது முதல் சூரிய குடும்பத்திற்கு வெளியே வெகு தொலைவில் இருக்கும் அனைத்து நட்சத்திர கூட்டங்களை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி (NASA’s James Webb Telescope) துல்லியமாக படம் பிடித்து பூமிக்கு அனுப்பி வைத்து வருகிறது.

அந்த வரிசையில் தற்போது ஒரு புதிய நட்சத்திரம் உருவாகி உள்ளது தெரியவந்துள்ளதை ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி (NASA’s James Webb Telescope) படம் பிடித்துள்ளது. அந்த புகைப்படத்தை நாசா வெளியிட்டு உள்ளது. அதில் ஒரு நட்சத்திரம் உடைந்து இரண்டு புதிய நட்சத்திரங்களாக உருவாகும் போது ஏற்படும் தீப்பிழம்பையும் படம் பிடித்து காண்பித்துள்ளது. நட்சத்திரங்களால் உமிழக்கூடிய வெப்பம் மற்றும் அதீத ஒளி அருகில் உள்ள வாயுக்கள் மற்றும் தூசிக்களில் பட்டு எதிரொலிக்கக்கூடிய காட்சிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளது. இது உருவாகி சில ஆயிரம் ஆண்டுகள் தான் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரியன் பிறக்கும்போது எப்படி இருந்ததோ அதை போன்ற இந்த புதிய நட்சத்திரமும் வடிவத்தில் ஒத்து இருக்கிறது. புதிய நட்சத்திரம் முழுமையாக உருவாகிய பின் நமது சூரியனை போலவே தோற்றம் கொண்டதாக இருக்கும் என நாசா விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த நட்சத்திரம் பூமியில் இருந்து ஆயிரம் ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது எனவும் நாசா தெரிவித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply