National Level Boxing Tournament : தமிழக வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்கம் வென்றனர்

தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் (National Level Boxing Tournament) தமிழக மாணவர்கள் அசத்தல் :

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில், ஒட்டுமொத்த போட்டிகளிலும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய தமிழக வீரர்கள் 48 பதக்கங்களை (31 தங்கம், 10 வெள்ளி, 7 வெண்கலம்) வென்று பதக்கப்பட்டியலில் (National Level Boxing Tournament) முதலிடம் பிடித்து, ‘சாம்பியன்’ பட்டம் வென்றனர். பஞ்சாப் அணி ஆனது 49 பதக்கங்களை (15 தங்கம், 24 வெள்ளி, 10 வெண்கலம்) வென்று பதக்கப்பட்டியலில் இரண்டாம் இடத்தையும், உத்தர பிரதேசம் அணி ஆனது 36 பதக்கங்களை (15 தங்கம், 9 வெள்ளி, 12 வெண்கலம்) வென்று பதக்கப்பட்டியலில் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.

16 முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய அளவிலான கிக் பாக்சிங் போட்டிகள் ஆனது சென்னை, ‘வாக்கோ இந்தியா கிக் பாக்சிங்’ கூட்டமைப்பு ஆதரவுடன், மேற்கு வங்க மாநிலத்தின் கிக் பாக்சிங் சங்கம் சார்பில் கடந்த 10ம் தேதி துவங்கி 14ம் தேதி முடிவடைந்தன. ‘பாயின்ட் பைட்டிங், லைட் காண்டாக்ட், கிக் லைட்’ உள்ளிட்ட பிரிவுகளில், மொத்தம் 410 வகையான போட்டிகள் ஆனது நடத்தப்பட்டன. வயது மற்றும் எடைப் பிரிவுகளின் அடிப்படையில் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மோதினர். இதில், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, அரியானா, இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 27 மாநிலங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழ்நாடு கிக் பாக்சிங் சங்கம் சார்பில் 45 வீரர்கள் (12 சிறுமியர் மற்றும் 33 சிறுவர்) பங்கேற்றனர். ஜூனியர் கிக் பாக்சிங் போட்டியில் பிரவீன் ஜெய் சீனிவாசன், ஜனனி தங்கம் வென்று அசத்தி உள்ளனர்.

மயிலாடுதுறையைச் சேர்ந்த நரிக்குறவர் தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் (National Level Boxing Tournament) தங்கம் வென்று அசத்தியுள்ளார். 19 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டி பிரிவில் தமிழ்நாடு சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள தெரசா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் 4 மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த நால்வரில் மகேஷ், வைதேகி ஆகிய இரண்டு மாணவிகள் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளனர். மேலும் இறுதிப்போட்டியில் கார்த்திகா, ஹீமா ஆகிய இரண்டு மாணவிகள் வெற்றியை நூலிழையில் தவறவிட்டு வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளனர்.

சொந்த ஊர் திரும்பிய மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு ஆனது அளிக்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவிகள் செய்தியாளர்களிடம், “ஏழ்மை நிலையில் உள்ள எங்களுக்கு தமிழக அரசு நிதி உதவி அளித்து கைகொடுத்து உதவினால் தேசிய அளவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவிலும் பல பதக்கங்களை நாங்கள் குவிப்போம்” என தெரிவித்தனர். தகுதி அடிப்படையில் இந்த போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள், தேர்வு செய்யப்பட்டு, ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் 23/08/2024 முதல் 11/09/2024-ம் தேதி வரை நடக்க உள்ள உலக கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பர்.

Latest Slideshows

Leave a Reply