Nokia G310 5G : நோக்கியா 5G ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகமாகிறது

இன்றைய செல்போன் உலகில் 80, 90-கள் தலைமுறையினால் அன்று முதல் இன்றுவரை மறக்க இயலாதது நோக்கியா (Nokia) செல்போன். இன்று வரை ஓயாது உழைத்துக்கொண்டு இருக்கும் நோக்கியா ஸ்மார்ட்போன், ஒட்டுமொத்த மக்களால் மறக்க முடியாத ஒன்றாகும்.

நோக்கியா தனது ஸ்மார்ட்போனை (Nokia Smartphone) அறிமுகம் செய்து பின்னாளில் பல்வேறு விதமான விமர்சனங்கள் காரணமாகவும் மற்றும் போட்டித்தன்மை காரணமாகவும் நோக்கியா ஸ்மார்ட்போனின் விற்பனையானது சமீபகாலங்களில் கடுமையான சரிவை எதிர்கொண்டது.

மீண்டும் இந்தியாவில் NOKIA Smartphone :

NOKIA நிறுவனம் இதுவரை இந்தியாவில் அதிக 4G போன்களை தான் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது மேலும் 5G போன்களை அறிமுகப்படுத்த நோக்கியா முடிவு செய்துள்ளது. 2023 செப்டம்பர் 6 ஆம் தேதியன்று, நோக்கியா நிறுவனம் தனது புதிய வகை 5G ஸ்மார்ட்போன் ஒன்றை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கண்டிப்பாக அது நோக்கியா G310 5G (Nokia G310 5G) மாடலாகத்தான் இருக்க வேண்டும். மேலும் இது குறித்த அறிவிப்பை நோக்கியா நிறுவனம் ட்விட்டரில் (X) தெரிவித்துள்ளது.

NOKIA G310 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் :

ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் சிப்செட் மூலம் இயங்கும் இந்த NOKIA ஸ்மார்ட்போன் 4GB RAM + 128GB இன்டர்னல் ஸ்டோரேஜை (Storage) வழங்குகிறது. மேலும் இது 720B ரெசல்யூஷன் உடனான 6.56-இன்ச் எல்சிடி டிஸ்பிளேவை வசதியை கொண்டுள்ளது.

இதன் டிஸ்பிளேவில் உள்ள வாட்டர் டிராப் நாட்ச்சில் 8MB Selfie Camara உள்ளது. பின்புறத்தில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் ஆட்டோஃபோகஸ் (AF) உடனான 50MB மெயின் கேமரா + 2MB டெப்த் கேமரா + 2MB மேக்ரோ சென்சார்கள் உள்ளன.

இதனுடைய கேமரா செட்டப்பில் சில AI ஃபில்டர்களும் (AI Filters) அடக்கம். இதன் கூடவே தெளிவான சவுண்ட்-ஐ வழங்கும் நோக்கியா ஓஸோ ஆடியோ (Nokia OZO Audio) உடன் வீடியோ ரெக்கார்டிங் செய்யும் ஆதரவும் உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை Nokia G310 5G மாடலானது 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 20W அளவுக்கு பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

நாம் கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது ஆண்ட்ராய்டு 13 OS (Android 13 OS), 3.5 MM ஆடியோ ஜாக், மைக்ரோ எஸ்டி ஸ்லாட், தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP 52 ரேட்டிங் (Dust and Splash Proof IP52 Rating) போன்றவைகளை கொண்டுள்ளது.

Nokia G310 5G ஸ்மார்ட்போன் குவிக்ஃபிக்ஸ் டிசைன் (QuickFix Design) உடன் வருகிறது. இதன் மூலம் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை செல்ஃப்-ரிப்பேர் (Self Repair) செய்து கொள்ள முடியும். இதற்காக நோக்கியா நிறுவனமானது சிங்கிள் சோர்ஸில் இருந்து வழிகாட்டிகளையும், ஒரிஜினல் உதிரி பாகங்களையும் வழங்கும்.

Nokia G310 5G ஸ்மார்ட்போனின் விலை :

அமெரிக்க சந்தையில் இது சராசரி 186 அமெரிக்க டாலர்கள் என்கிற விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது நம் இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.15,400/-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே போன்ற விலை நிர்ணயத்தை நாம் இந்தியாவிலும் எதிர்பார்க்கலாம்.

Nokia G310 5G உடன் சேர்த்து நோக்கியா C 210 என்கிற மாடலும் அமெரிக்க சந்தையில் அறிமுகமானது.  நோக்கியா C 210 ஸ்மார்ட்போன் இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.9000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply