Oppo A38 : செப்டம்பர் 13-ல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது...

Oppo A38 ஸ்மார்ட் போன் மாடலானது கடந்த வாரம் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளியாகியிருந்தது. இந்நிலையில், வரும் (13.9.2023) அன்று இந்தியாவிலும் இதன் 4GB RAM+128GB ஸ்டோரேஜ் வசதியுள்ள வேரியண்ட் வெளியாக உள்ளது. Oppo A38-ல் இடம்பெற்றுள்ள சிறப்பம்சம் மற்றும் அதன் செயல்பாடு குறித்த விரிவான தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஓப்போ A38 சிறப்பம்சங்கள் (Oppo A38 Specification) :

பேட்டரி மற்றும் டிஸ்பிளே (Battery & Display)

Oppo A38 மாடல் 4GB ரேம் மற்றும் 128GB Storage வசதியோடு MediaTek Helio G85 SoC ப்ராசஸருடன் வெளியாகியுள்ளது. இந்த மொபைல் Android 13-Based ColorOS 13.1 அடிப்படையில் இயங்க கூடியதாகும். Oppo A38-ல் 5000mAh திறனுள்ள பேட்டரி மற்றும் (33W SuperVOOC) சார்ஜிங் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 6.56 இன்ச் HD+ (1612×720 பிக்ஸல்ஸ்) LCD Display மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் ஆகியவை பொறுத்தப்பட்டுள்ளது.

​கேமரா (Camera)

இந்த Oppo A38 ஸ்மார்ட் போனில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. அந்த வகையில், 50MB மெயின் கேமரா + 2MB போர்ட்ராய்டு கேமரா வருகிறது. முன்புறம் 5MB செல்ஃபீ கேமராவும் இடம்பெற்றுள்ளது. அதோடு கூடுதலாக LED பிளாஷ் இடம்பெற்றுள்ளது. இந்த கேமராவில் போர்ட்ராய்டு போகே (Portrait Bokeh) மற்றும் AI போர்ட்ராய்டு ரீடச்சிங் (AI Portrait Retouching) அம்சங்கள் வருகின்றன.

ஸ்டோரேஜ் (Storage)

இந்த Oppo A38 போனில் 4GB ரேம் + 4GB விர்சச்சுவல் RAM வருகிறது. ஆகவே, 8GB ரேம் + 128 GB மெமரி வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது. அதுமட்டுமல்லாமல், 1 டிபி வரையில் மைக்ரோ எஸ்டி (Micro SD) கார்டு சப்போர்ட் கொண்டுள்ளது.

Oppo A38 (Colors)

இந்த Oppo A38 ஸ்மார்ட் போன் மாடலானது குளோவிங் பிளாக் (Glowing Black) மற்றும் குளோவிங் கோல்டு (Glowing Gold) ஆகிய இரண்டு கலர்களில் விற்பனைக்கு வருகிறது.

​Oppo A38 விலை மற்றும் விற்பனை விவரம் :

இந்த போனின் 4 GB ரேம் + 128 GB மெமரி மாடலின் விலை ரூ.12,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்போது, பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ஓப்போ.காம் (Oppo.com) ஆகிய இரு தளங்களில் விற்பனை வருகிறது. இப்போது, ப்ரீ-ஆர்டருக்கு கிடைக்கிறது. வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் Oppo A38 விற்பனை தொடங்குகிறது.

இந்த ​Oppo A38 போனுக்கு அறிமுக சலுகையாக ரூ.1,300 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியை ஃபெடரல் வங்கி (Federal Bank), ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank), எச்டிஎப்சி வங்கி (HDFC Bank), எஸ்பிஐ (SBI) போன்ற வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பெற்றுக்கொள்ள முடியும்.

Latest Slideshows

Leave a Reply