OPPO Reno 11 Pro ஸ்மார்ட்போன் ஜனவரி 11ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது

ஓப்போ பிரியர்களை வெயிட்டிங் மோடில் காத்திருக்க வைத்த OPPO Reno 11 Pro போனின் இந்திய வெளியீட்டு விவரங்கள் கசிந்துள்ளது. ஏற்கனவே சீனாவில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பு பெற்றிருந்த நிலையில் மற்ற நாடுகளில் OPPO Reno 11 Pro-வின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்ததது. இந்நிலையில் வரும் ஜனவரி 11ஆம் தேதி இந்த போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.

ஓப்போ ரெனோ 11 ப்ரோ சிறப்பம்சங்கள் (OPPO Reno 11 Pro Specifications) :

  1. Oppo Reno 11 Pro Display :
    இந்த OPPO Reno Pro போனில் 6.7 இன்ச் (2772 × 1240 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) டிஸ்பிளேவுடன்  வருகிறது. மேலும் இதுவொரு 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட கர்வ்ட் ஓஎல்இடி (OLED) மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 240Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. அதோடு 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. இந்த OPPO Reno 11 Pro போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 8+ Gen 1 4nm Mobile) சிப்செட் வருகிறது.

  2. Oppo Reno 11 Pro Storage :
    ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) சப்போர்ட்யுடன் விற்பனைக்கு  வருகிறது. மேலும் கேமிங் பிரியர்கள் விரும்பும் அட்ரினோ 730 ஜிபியு (Adreno 730 GPU) கிராபிக்ஸ் கார்டு இந்த Reno போனில் வழங்கப்பட்டுள்ளது. ஓப்போவில் 12GB RAM + 256GB மெமரி மற்றும் 12GB RAM + 512GB மெமரி கொண்ட 2 வேரியண்ட்வுடன் விற்பனைக்கு வர இருக்கிறது.

  3. Oppo Reno 11 Pro Camera :
    இந்த ஓப்போ ரெனோ 11 ப்ரோ போனில்  கேமரா அல்ட்ரா ப்ரீமியமாக கொடுக்கப்பட்டுள்ளது. சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சார் கொண்ட 50MB பிரைமரி கேமரா வருகிறது. அதோடு சோனி ஐஎம்எக்ஸ்709 (Sony IMX 709) சென்சார் கொண்ட 32MB டெலி போட்டோ கேமரா வருகிறது. இதனுடன் 8MB அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இமேஜ் நாய்ஸ் ரெடக்சன் சப்போர்ட்டுக்காக மரிசிலிகான் எக்ஸ் என்பியு (MariSilicon X NPU) டெக்னாலஜி புதிதாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

  4. Oppo Reno 11 Pro Colors :
    இந்த ஓப்போ ரெனோ 11 ப்ரோ போனில் அப்சிடியன் பிளாக் (Obsidian Black) மற்றும் டர்க்கைஸ் கிரீன் (Turquoise Green) மற்றும் மூன்ஸ்டோன் சில்வர் (Moonstone Silver) ஆகிய 3 கலர்களில் வருகிறது.

  5. Oppo Reno 11 Pro Rate :
    ஓப்போ ரெனோ 11 ப்ரோ 12GB RAM + 256GB மாடலின் விலை ரூ.41,100/- ஆகவும் 12GB RAM + 512GB மாடலின் விலை ரூ.44,625/- ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அறிமுகமாகும்போது சில மாற்றங்களோடு இந்த போன் வெளியாகலாம்.

Latest Slideshows

Leave a Reply