Phoenix Veezhan Teaser : பீனிக்ஸ் வீழான் படத்தின் டீசர் வெளியீடு

பிரபல நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா கதையின் நாயகனாக அறிமுகமாகியுள்ள பீனிக்ஸ் வீழான் படத்தின் டீசர் (Phoenix Veezhan Teaser) வெளியாகியுள்ளது.

பீனிக்ஸ் வீழான் :

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவரது மகன் சூர்யா. இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியுடன் சிந்துபாத் படத்தின் மூலம் அறிமுகமானார். இந்நிலையில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகும் பீனிக்ஸ் வீழான் என்ற படம் உருவாகியுள்ளது. பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கியுள்ள இந்த படத்தின் டீசர் (Phoenix Veezhan Teaser) வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதியின் மகன் ஹீரோவாக அறிமுகமான முதல் படத்திலேயே ரத்தம் தெறிக்க களமிறங்கியுள்ளார்.

Phoenix Veezhan Teaser :

டீசரின் தொடக்கக் காட்சி ஒரு சிறார் சீர்திருத்த சிறையுடன் தொடங்குகிறது. விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, சீர்திருத்த பள்ளியில் முகத்தை மூடிக்கொண்டு கையில் விலங்குடன் குற்றவாளியாக அறிமுகமாகிறார். அந்தக் காட்சியே இந்தப் படம் ஒரு ஆக்ஷன் படம் என்பதை உணர்த்துகிறது. அடுத்த காட்சியில் சூர்யாவின் சண்டைக் காட்சிகளும், குத்துச்சண்டை வீரராக நடிக்கும் காட்சிகளும் காட்டப்படுகின்றன. குத்துச்சண்டை காட்சிகளுக்காக சூர்யா ஒரு குத்துச்சண்டை வீரரைப் போல உழைத்திருக்கிறார் என்பதை இந்தக் காட்சி நமக்கு நன்றாக உணர்த்துகிறது. சூர்யாவின் வேகமான பஞ்ச்கள் அவருடைய உழைப்பைக் காட்டுகின்றன. படத்தின் பாதி டீசர் ஒரு குத்துச்சண்டை வீரரின் கதையை நமக்கு நன்றாகச் சொல்கிறது. படத்தில் ரத்தமும், வன்முறையும் அதிகம் என்பதை படத்தின் டீசர் நமக்கு உணர்த்துகிறது. இந்த டீசரில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா. உங்களுக்கு இது வெறும் கேம். எங்களுக்கு இது லைஃப் என்று பேசும் வசனம் உள்ளது. சூர்யாவின் கண்கள் விஜய் சேதுபதியின் சாயல் போலவே இருக்கிறது, அதுவே அவருக்கு மிகப்பெரிய பலம்.

இந்தப் படத்தில் சூர்யாவுடன் வரலட்சுமி சரத்குமார், நடிகர் சம்பத், நடிகை தேவதர்ஷினி ஆகியோரும் நடித்துள்ளனர். படத்தில் வரலட்சுமி மற்றும் சம்பத் ஆகியோர் மிக முக்கியமான கதாபாத்திரங்கள் என்று டீசரில் நன்றாக தெரிகிறது. சாம் சி.எஸ். இசைமைத்துள்ள இந்த படத்தை ராஜலட்சுமி அனல் அரசு ஏ.கே.பிரேவ்மேன் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ளனர். இயக்குநராக மறுபிறவி எடுத்திருக்கும் சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசே இந்தப் படத்துக்கும் சண்டைப் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார். இருப்பினும், ரத்தம், குத்துச்சண்டை என எல்லாத் தரப்பு மக்களையும் இந்த பீனிக்ஸ் கட்டிப் போடுமா? என்பது படம் வெளியான பிறகே தெரியும்.

Latest Slideshows

Leave a Reply